
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 19. சொரூப உதயம்
பதிகங்கள்

குலைக்கின்ற நீரிற் குவலயம் நீரும்
அலைக்கின்ற காற்றும் அனலொடா காசம்
நிலத்திடை வானிடை நீண்டகன் றானை
வரைத்து வலஞ்செயு மாறறி யேனே.
English Meaning:
Parasivam is PervasiveIn that primordial Flood of Waters
(At the time of Dissolution)
As Waters of the earth, the tempestuous Winds
The Fire, the Sky and Earth
He interminably extended in Space;
I know not how to limit Him
And thus adore Him.
Tamil Meaning:
மண் தன்னை அழிக்கும் தன்மையுடைய நீரினுள் அழியும், அவ்வாறே நீரும், காற்றும் முறையே நெருப்பினுள்ளும் ஆகாயத்தினுள்ளும் அழியும். எனவே, இப்பொருள்களுள் அடங்கியிருப்பவர் அல்லன் சிவன். அவன் பூமியையும் கடந்து மேற்போகியும் அளவின்றியிருப்பவன். (``பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாத மலர் - போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே``* அவனை ஒரு சிறுகுடிலுள் அடக்கி வைத்துக் கண்ணாற் கண்டு, காலால் வலம் வந்து, வாயால் வாழ்த்தி, மெய்யால் வணங்கி இன்புறுதல் எளிதாயிருக்க, அம்முறையை யறியாமல் யான் அல்லல் உறுகின்றேன்.Special Remark:
என்றது, அறிவிலாதார் செயலைத் தம்மேல் வைத்து அருளிச் செய்து இரங்கியவாறு. `குவலயம் குலைக்கின்ற நீரில்` என மாற்றி, அதன்பின்னும், ``ஆகாசம்`` என்பதன் பின்னும் `அழியும்` என்பன வருவிக்க. வரைத்தல் - அளவுட்படுத்தல். `படுத்தப்படுவது குருவுருவம்` என்க. என்றாற்போலும் திருமொழிகளால் ஞான குருவின் அருமையில் எளிமையை ஆய்ந்துணர்க. வலம் செய்தல் கூறவே, இனம் பற்றி ஏனையவும் கொள்க.இதனால், அடைதற்கரிய பொருளை எளிதில் அடையும் முறை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage