
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 19. சொரூப உதயம்
பதிகங்கள்

ஆமா றறிந்தேன் அகத்தின் அரும்பொருள்
போமா றறிந்தேன் புகுமாறும் ஈதென்றே
ஏமாப்ப தில்லை இனிஓர் இடமில்லை
நாமாம் முதல்வனும் நாமென லாமே.
English Meaning:
Knowledge of the Way of BecomingI knew the Way of Becoming,
I knew the Way of Seeking the Rare One,
I knew the Way of Entrance to Him;
No more the egoity,
None other the locale
The Primal One I become,
He and I one will be.
Tamil Meaning:
பாச ஞான பசு ஞானங்களால் எளிதில் அறியப் படும் பொருள்கள் யாவும் நமக்குப் புறத்தே நிற்பனவாக, அந்த ஞானங்களால் அறிதற்கரிய பொருள் நம்மின் வேறாகாது நம் உள்ளே யிருத்தலை நான் அறிந்தேன். மேலும், அந்தப் பொருள் நம்மை விட்டு நீங்குதற் காரணத்தையும் நான் `இது` என அறிந்தேன்; நீங்கிப் போன அது மீட்டும் வந்து புகுதற் காரணத்தையும் `இது` என அறிந்தேன். இனி நான் `யான், எனது` எனச்செருக்கு மாட்டேன்; அந்தப் பொருளை யன்றி வேறொரு புகலிடமும் எனக்கு இல்லை. இந்நிலைமை, `முன்பு தானாய் இராது நாமாகவேயிருந்த முதல்வனும் நாமே` எனத் தக்கதாய் உள்ளது.Special Remark:
`அரும்பொருள் அகத்தின் ஆமாறு அறிந்தேன்` எனவே, எளிய பொருள்கள் புறத்தேயிருத்தல் பெறப்பட்டது. போதல் - நீங்குதல். அது விளங்காது மறைந்திருந்தைம அதற்குக் காரணம். ஆன்ம அறிவு `யான் எனது` எனச் செருக்கினமை. புகுதல், மறைவின்றி வெளிப்பட்டு விளங்குதல். அதற்குக் காரணம் அச்செருக்குக்கள் இன்றி, அடங்கி ஒடுங்கினமை. முன்பு செய்த குற்றங்களை இனிச் செய்யமாட்டேன்` என்பார். ``ஏமாப்பதில்லை. இனி ஓர் இடமில்லை`` என்றார். பெத்த காலத்தில் முதல்வன் வேறு விளங்காது, உயிர்களாயே நின்றதனை, ``நாம் ஆம் முதல்வன்`` என்றும், முத்தி காலத்தில் உயிர் வேறு விளங்காது முதல்வனாயே நிற்றலின், ``முதல்வனும் நாம் எனலாம்`` என்றும் கூறினார். இதனை மெய்கண்ட தேவர்,``அவனே தானே யாகிய அந்நெறி
ஏக னாகி``8
என்றார். தம்மோடு தம் மாணாக்கரையும் உளப்படுத்த, ``நாம்`` என்றார்.
இதனால், சொரூப உதயத்தின் முடிநிலை இயல்பு கூறி முடிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage