
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- ஒன்பதாம் தந்திரம் - 1. குருமட தரிசனம்
- ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்
- ஒன்பதாம் தந்திரம் - 3. பிரணவ சமாதி
- ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை
- ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் - தூலம்
- ஒன்பதாம் தந்திரம் - 6. பஞ்சாக்கரம் - சூக்குமம்
- ஒன்பதாம் தந்திரம் - 7. அதி சூக்கும பஞ்சாக்கரம்
- ஒன்பதாம் தந்திரம் - 8. காரண பஞ்சாக்கரம்
- ஒன்பதாம் தந்திரம் - 9. மகா காரண பஞ்சாக்கரம்
- ஒன்பதாம் தந்திரம் - 10. திருக்கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 11. சிவானந்தக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 12. சுந்தரக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் 14. பொற்றில்லைக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 14. பொற்றில்லைக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 16. ஆகாசப் பேறு
- ஒன்பதாம் தந்திரம் - 17. ஞானோதயம்
- ஒன்பதாம் தந்திரம் - 18. சத்திய ஞானானந்தம்
- ஒன்பதாம் தந்திரம் - 19. சொரூப உதயம்
- ஒன்பதாம் தந்திரம் - 20. ஊழ்
- ஒன்பதாம் தந்திரம் - 21. சிவ ரூபம்
- ஒன்பதாம் தந்திரம் - 22. சிவ தரிசனம்
- ஒன்பதாம் தந்திரம் - 23. முத்தி பேதம் கரும நிருவாணம்
- ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
- ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி
- ஒன்பதாம் தந்திரம் - 26. வரையுரை மாட்சி
- ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை
- ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
- ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்
Paadal
-
1. கொடுகொட்டி பாண்டரம் கோடுசங் காரம்
நடம்எட்டோ(டு) ஐந்(து) ஆறு நாடியுள் நாடும்
திடம்உ ற்றெழும் தேவ தாருவனத் தில்லை
வடம்உற்ற மாவன மன்னவன் தானே.
-
10. மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூரும்இவ் வானின் இலங்கை குறிஉறும்
சாரும் திலைவனம் தண்மா மலயத்தூ
டேறும் சுழுமுனை இவைசிவ பூமியே.
-
11. பூதல மேருப் புறத்தான தெக்கணம்
ஓதும் இடைபிங் கலைஒண் சுழுனையாம்
பாதி மதியோன் பயில்திரு அம்பலம்
ஏதமில் பூதாண்டத் தெல்லையின் ஈறே.
-
2. தெற்கு வடக்குக் கிழக்குமேற் குச்சியில்
அற்புத மானஓர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில்பே ரின்பத் துபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே.
-
3. அடியார் அரன்அடி ஆனந்தங் கண்டோர்
அடியா ரவர்அர னத்தனரு ளுற்றோர்
அடிஆர் பவரே அடியவ ராவர்
அடியார்பொன் னம்பலத் தாடல்கண் டாரே.
-
4. அடங்காத என்னை அடக்கி அடிவைத்(து)
இடங்காண் பரானந்தத் தேஎன்னை இட்டு
நடந்தான் செயும்நந்தி தன்ஞானக் கூத்தன்
படந்தான்செய் உள்ளுட் படிந்திருந் தானே.
-
5. உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனை
செம்பொற் றிருமன்றுட் சேவகக் கூத்தனை
சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை
இன்புறு நாடிஎன் அன்பில்வைத் தேனே.
-
6. மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்
பூணுற்ற மன்றுட் புரிசடைக் கூத்தனைச்
சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை
ஆணிப்பொற் கூத்தனை யாரறி வாரே.
-
7. விம்மும் வெருவும் விழும் எழும் மெய்சோரும்
தம்மையும் தாம்அறி யார்கள் சதுர்கெடும்
செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்
அம்மலர்ப் பொற்பாதத்(து) அன்புவைப் பார்கட்கே.
-
8. தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்
வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்
ஓட்டறும் ஆசை அறும் உளத் தானந்த
நாட்டம் முறுக்குறு நாடகம் காணவே.
-
9. காளியோ டாடிக் கனகா சலத்தாடிக்
கூளியோ டாடிக் குவலயத் தேஆடி
நீடிய நீர்த்தீக்கால் நீள்வானத் தேயாடி
நாளுற அம்பலத் தேஆடும் நாதனே.