
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து
பதிகங்கள்

அடங்காத என்னை அடக்கி அடிவைத்(து)
இடங்காண் பரானந்தத் தேஎன்னை இட்டு
நடந்தான் செயும்நந்தி தன்ஞானக் கூத்தன்
படந்தான்செய் உள்ளுட் படிந்திருந் தானே.
English Meaning:
Effect of Witnessing Siva Dance in Golden HallUncontrolled was I;
He controlled me;
He blessed me with His Holy Feet;
He immersed me in Transcendental Bliss immense
Thus He dances, Our Nandi,
The great dancer of Jnana Dance;
Like a picture He made me sit still
And in me abided.
Tamil Meaning:
பலவகையான நடனங்களையும் செய்பவன் சிவன். அவன் மிக மேலான ஞான டனத்தையும் செய்ய வல்லவன். அந்த ஞான நடனத்தினால், அடங்காத எனது தற்போதத்தைத் தனது வலது தாளால் மிதித்து அடக்கி, இடப்பக்கத்தில் காணப்படுவதாய, எடுத்த பாதத்தை எனது தலைமேல் வைத்து, என்னைப் பேரின்பக் கடலுள் ஆழ்த்தினான். இனி ``உள்ளக் கிழியின் உருவெழிதிப்``* பார்க்கும் யோகிகட்கு அக்கிழி யுருவில் ஒன்றி விளங்குகின்றான்.Special Remark:
``என்னை`` இரண்டில் முன்னது, `எனது போதத்தை` என்றபடி. ``அடங்காத என்னை அடக்கி`` என்பதனோடு, ``மலம் சாய அமுக்கி``* என்பதையும், ``இடம் காண் அடி வைத்து என்னைப் பரானந்தத்து இட்டு`` என்பதனோடு, ``அருள்தான் எடுத்து - நேயத்தால் - ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்`` என்பதையும் ஒப்பீடுக.மூன்றாம் அடியை முதலிற் கூட்டி உரைக்க. ``நடந்தான்`` என்பதில் `தான்`, அசை. ஞானக்கூத்தை வகுத்தரைப்பதே ``மாயை தனை உதறி``* எனத் தொடங்கும், ஞானக்கூத்து ஞானியர் பொருட்டச் செய்வதாகலின், ஈற்றடியிற்கூறியது யோகியர்க்காயிற்று. ஞானியரும், யோகியரும் அல்லாத பிறர்க்கெல்லாம் சிவன் ஊன நடனத்தைச் செய்வான் என்க. அது, ``தோற்றம் துடியதனில்``* என்னும் வெண்பாவில் சொல்லப்பட்டது.
இதனால், பொற்பதிக் கூத்துள் ஞான நடனம் உயிர்கட்குத் தரும் பயன் கூறும் முகத்தால், அதன் தரிசனச் சிறப்பு உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage