
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து
பதிகங்கள்

கொடுகொட்டி பாண்டரம் கோடுசங் காரம்
நடம்எட்டோ(டு) ஐந்(து) ஆறு நாடியுள் நாடும்
திடம்உ ற்றெழும் தேவ தாருவனத் தில்லை
வடம்உற்ற மாவன மன்னவன் தானே.
English Meaning:
The Dances of Siva, Eight and Five — Witnessed in Six AdharasKodukkotti, Pandarangam, Kodu, Samharam and others,
—These Eight dances1 He danced,
The Five dances too He danced,
All these you witness in the Nadis (Adharas) six;
In the yogic way;
He danced too in the forests of Deva-daru2,
And in Tillai3 and in Alavanam4
—He the King Supreme.
Tamil Meaning:
தேவதாரு வனம், தில்லை வனம், திருஆலவனம் (திருவாலங்காடு என்பவற்றில் எழுந்தருளியுள்ள தலைவன் கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம், ஆகிய சங்காரக் கூத்தக்களையும் அட்ட மூர்த்தத்தில் நின்று அவற்றை இயக்கி ஆடும் எட்டுக் கூத்தினையும், ஐந்தொழிற் கான ஐந்து கூத்தினையும், சுழுமுனை நாடியில் அறியப்படும் ஆறு ஆதாரங்களில் ஆறு கூத்தினையும் உறுதியாகக்கொண்டு ஆடுகின்றான்.Special Remark:
எனவே, `எங்கும் அகண்டாகாரமாய், அருவால் நின்று ஆடுதலேயன்றி, சில உயர் இடங்களில் அவற்றைத் தன்னுடையனவாக வரையறை செய்து கொண்டு அங்கு உருவத்திருமேனி கொண்டு ஆடுவதே பொற்பதிக்கூத்து` என்றதாயிற்று. `பொன்` என்றது தெய்வத்தன்மையை. பொற்பதி - தெய்வத் தன்மையுடைய தலங்கள்.`கொடுகொட்டி, பாண்டரங்கம்` என்னும் கூத்துக்களை அசுரரை அழித்த காலத்தில் சிவபெருமான் ஆடினவாகச் சிலப்பதிகார உரை கூறிற்று.9 கலித்தொகைக் கடவுள் வாழ்த்தில், `சிவன் கொடு கொட்டி, பாண்டரங்கம், காபாலம் - என்னும் கூத்துக்களை ஆடும் பொழுது அக்கூத்திற்கு உமையம்மையே தாளம் தருவான்` எனக் கூறியதற்கு, ஆண்டுப் பிறர் இல்லையே`` என்ற நச்சினஆர்க்கினயரது விளக்கத்தால் அக்கூத்துக்கள் சங்காரத்தின் முடிவில் செய்யப்படுவன வாதல் விளங்கும். இனி, பிரம கபாலத்தை ஏந்தி ஆரும் கூத்தே காபாலக் கூத்து ஆதலின் அதுவே தாருகாவனத்தில் அம்முனிவர்தம் பத்தினியர் முன்பும், முனிவர் முன்பும் ஆடிய கூத்தாகும். இவை போன்ற எல்லா வகைக் கூத்துக்களையும் சிவன், மேல், ஆன நடம் ஐந்து``3 எனக் குறிக்கப்பட்ட ஐந்து மன்றங்களில் ஆடல் திருமேனி ஆடுகின்றான் என்பது, ``தாருவனத் தில்லை (வன), வடமாவன மன்னவன்`` என்றதனால் விளங்கிற்று. தாருகாவனம் ஒரு தலமாக விளங்கவில்லை. தில்லை வளமும், திருஆலவனமும் தலங்களாய் விளங்குதல் வெளிப்படை. இவற்றைக் கூறவே சிறப்பாக ஏனை மூன்றும், பிறவும் கொள்ளப்படும். கோடு, கிளை` என்னும் பொருட்டால், முதல் உறுப்பாய தலையைக் குறித்தது. `பாண்டரங்கம்` என்பது ஈறு குறைந்து, `பாண்டரம்` என நின்றது. ``கோடு`` என்பதன் பின் `ஆகிய சங்காரங்கள்` என மாற்றிக்கொள்க. `இவற்றைத் திடமாகக் கொண்டு எழும் மன்னவன்` என வினைமுடிபு செய்க. எழுதல் - முயலுதல்; அது நிகழ்த்துதலைக் குறித்தது.
இதனால், அனைத்து வகையான கூத்துக்களையும் சிவன் உருவத் திருமேனி கொண்டு தலங்களில் ஆடுவதே பொற்பதிக் கூத்தாம்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage