
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- ஐந்தாம் தந்திரம் - 1. சுத்த சைவம்
- ஐந்தாம் தந்திரம் - 2. அசுத்த சைவம்
- ஐந்தாம் தந்திரம் - 3. மார்க்க சைவம்
- ஐந்தாம் தந்திரம் - 4. கடுஞ் சுத்த சைவம்
- ஐந்தாம் தந்திரம் - 5. சரியை
- ஐந்தாம் தந்திரம் - 6. கிரியை
- ஐந்தாம் தந்திரம் - 7. யோகம்
- ஐந்தாம் தந்திரம் - 8. ஞானம்
- ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம்
- ஐந்தாம் தந்திரம் - 10. சகமார்க்கம்
- ஐந்தாம் தந்திரம் - 11. சற்புத்திர மார்க்கம்
- ஐந்தாம் தந்திரம் - 12. தாச மார்க்கம்
- ஐந்தாம் தந்திரம் - 13. சாலோக மாதி
- ஐந்தாம் தந்திரம் - 14. சாரூபம்
- ஐந்தாம் தந்திரம் - 15. சாயுச்சம்
- ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்
- ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்
- ஐந்தாம் தந்திரம் - 18. நிராசாரம்
- ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்
Paadal
-
1. பொன்னால் சிவசா தனம்பூதி சாதனம்
நன்மார்க்க சாதன மாஞான சாதனம்
துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனம்
சன்மார்க்க சாதன மாம்சுத்த சைவர்க்கே.
-
10. விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள்
கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள்
எண்ணினைச் சென்றணு காமல் எணப்படும்
அண்ணலைச் சென்றணு காபசு பாசமே.
-
11. ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக
நின்று சமய நிராகாரம் நீங்கியே
நின்ற பராற்பர நேயத்தைப் பாதத்தால்
சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே.
-
2. கேடறு ஞானி கிளர்ஞான பூபதி
பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தி
னூடுறு ஞானோ தயன்உண்மை முத்தியோன்
பாடுறு சுத்தசை வன்பத்தன் நித்தனே.
-
3. ஆகமம் ஒன்பான் அதில்ஆன நாலேழு
மோகமில் நாலேழும் முப்பேதம் உற்றுடன்
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மைஒன்
றாக முடிந்த தருஞ்சுத்த சைவமே.
-
4. சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓரேழும்
சத்தும் அசத்தும் தணந்த பராபரை
உய்த்த பராபரை உள்ளாம் பராபரை
அத்தன் அருட்சத்தி யாய்எங்கு மாமே.
-
5. சத்தும் அசத்தும் தணந்தவர் தானாகிச்
சித்தும் அசித்தும் தெரியாச் சிவோகமாய்
முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினோர்
சித்தியும் அங்கே சிறந்துள தானே.
-
6. தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற
மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற
முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை
உன்னத் தகும் சுத்த சைவர் உபாயமே.
-
7. பூரணந் தன்னிலே வைத்தற்ற அப்போதத்
தாரண வந்த மதிசித்தாந் தத்தொடு
நேரென ஈராறும் நீடும் நெடும்போகம்
காரண மாம்சுத்த சைவர்க்குக் காட்சியே.
-
8. மாறாத ஞானம் மதிப்பற மாயோகம்
தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப்
பேறான பாவனை பேணி நெறிநிற்றல்
கூறாகும் ஞானி சரிதை குறிக்கிலே.
-
9. வேதாந்தங் கண்டோர் பிரமவித் தியாதரர்
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள்
வேதாந்த மல்லாத சித்தாந்தங் கண்டுளோர்
சாதா ரணர் அன்ன சைவர் உபாயரே.