
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 3. மார்க்க சைவம்
பதிகங்கள்

தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற
மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற
முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை
உன்னத் தகும் சுத்த சைவர் உபாயமே.
English Meaning:
Suddha Saiva StrategyThe Self, Para and the Sadasiva that is Lord,
The categories three — Pati, Pasu and pasa,
The Immaculate Ancient One,
And the Tattvas that bind Jiva
And the goal of Liberation
—On All these in accord contemplate
They, of the path of Suddha Saiva.
Tamil Meaning:
ஆன்மா, `யாதும் செய்யாது அமைதியாயுள்ள பரசிவன், `சதாசிவன்` எனப்படுகின்ற ஐந்தொழில் முதல்வன், அப்பதியோடு ஏனைப் பசு பாசங்கள், அநாதி தொட்டே உள்ள ஆணவப் பிணிப்பாகிய முதற்பந்தம், அது நீங்கி நின்ற வீடு` என்னும் இவற்றை ஐயந்திரிபு அற ஆராய்ந்துணர்தல் என்பர். இவை சுத்த சைவராவார் தமக்கு உரிய உபாயமாகும்.Special Remark:
`மாசற்ற வீட்டினை` எனக் கூட்டியுரைக்க. `சுத்த சைவராவார் உபாயம்` என ஆக்கம் வருவித்து உரைக்க.இதனால், `தத்துவ ஆராய்ச்சி மார்க்க சைவமாம்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage