
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 3. மார்க்க சைவம்
பதிகங்கள்

கேடறு ஞானி கிளர்ஞான பூபதி
பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தி
னூடுறு ஞானோ தயன்உண்மை முத்தியோன்
பாடுறு சுத்தசை வன்பத்தன் நித்தனே.
English Meaning:
Greatness of Jnani in Suddha SaivamThe blemishless Jnani is king of Wisdom`s realm
He is the Sun, whose beams pierce the massive lore of
Vedanta-Siddhanta
His is salvation True
He, the immortal one
And devoted true to Suddha Saiva way.
Tamil Meaning:
பின்னர்க் கெட்டொழியாது நிலை பெற்று நிற்கும் ஞானத்தை உணர்ந்தவனும், அதனால் `ஞான வேந்தன்` எனப் புகழப்படுபவனும், அழிவில்லாத வேத முடிவில் தொடங்கி விரிந்த சிவாகமங்களின் நாற்பாதங்களினுள்ளும் பொருந்தி விளங்கும் பொருள்கள் விளங்கப்பெற்ற அறிவையுடையவனும், அவற்றால் உண்மை முத்தியாகிய பரமுத்தியைப் பெறும் தகுதியை அடைந்தோனு மாகிய பெருமை பொருந்திய சுத்த சைவனுக்குத் தொண்டு பூண்டவன் பிறவிப் பயனைப் பெற்றவனாவன்.Special Remark:
எனவே, `இவன், மார்க்க சைவத்துள் மற்றொரு பகுதியினன்` என்பது பெறப்பட்டது. இதனுள் சுத்த சைவனது பெருமையை யே விரித்து, `அவன்பால் பத்தி பூண்டவன் சித்தன்` எனக் கூறப் பட்டது. சித்தன் - சித்திக்கப் பெற்றவன். பெறுதலுக்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ``சித்தாந்தம்`` என்றது சிவாகமங்களை.இதனால், சுத்த சைவர்க்குத் தொண்டு பூண்டொழுகுதலும் மார்க்க சைவத்தின் ஒரு பகுதியாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage