
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 3. மார்க்க சைவம்
பதிகங்கள்

ஆகமம் ஒன்பான் அதில்ஆன நாலேழு
மோகமில் நாலேழும் முப்பேதம் உற்றுடன்
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மைஒன்
றாக முடிந்த தருஞ்சுத்த சைவமே.
English Meaning:
Conclusions of Suddha SaivamNine are the Agamas of yore
In time expanded into twenty and eight,
They then took divisions three*
Into one truth of Vedanta-Siddhanta to accord
That is Suddha Saiva, rare and precious.
Tamil Meaning:
தொல் ஆகமங்கள் ஒன்பதே, `இருபத்தெட்டு` என்பன அவற்றினின்றும் விரிந்தனவாம். `சிவபேதம், உருத்திர பேதம், தேவ பேதம்` என்னும் முப்பேதங்களும் `இருபத்தெட்டு` என்னும் அவற்றில் சொல்லப்படுவனவே. ஆகமங்கள் எத்துணையாக விரிந்து, எத்துணைப் பேதப்பட்டிருப்பினும் தற்போதத்தைப் போக்க வல்ல, வேதாந்தத் தெளிவாம் சித்தாந்த மாகிய அவற்றின் துணிபு ஒன்றேயாக முடிந்ததே சுத்த சைவநிலை வாய்ப்பதாகும்.Special Remark:
எனவே, `அங்ஙனம் பல ஆகமங்களின் பொருள்களை யும் ஒருமைப்பட உணர்தலும் மார்க்க சைவப் பகுதியாம்` என்ற தாயிற்று. இங்குக் கூறப்பட்ட ஆகமம் பற்றிய செய்திகளை முதல் தந்திரம் - ஆகமச் சிறப்பு அதிகாரத்தில் காண்க. ஆன - ஆனவை. மெய்ம்மை - முடிந்த பொருள்.இதனால், சைவாகமங்களின் பொருள்களை ஒன்றோடு ஒன்று முரணாதவாறு ஒருமைப்படக் காண்டலும் மார்க்க சைவமாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage