
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 3. மார்க்க சைவம்
பதிகங்கள்

ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக
நின்று சமய நிராகாரம் நீங்கியே
நின்ற பராற்பர நேயத்தைப் பாதத்தால்
சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே.
English Meaning:
Siddhanta is to Unite With SivaYou and He are not two separate
You and He are but one united;
Thus do you stand,
Freed of all sectarian shackles;
Adore the Feet of Paraparai
And the Siva become One;
—That the way Siddhanta fulfills.
Tamil Meaning:
மேற் கூறிய, `சிவனும், சீவனும் ஒருபொருளே` என்றுகூறும் `பிரம வித்தியாவாதமும், இருவரும் வேறுவேறானவர் களே` எனக் கூறும் வேதாந்தம் அல்லாத அசுரௌத வாதமும் இன்றி, `இருவரும் கலப்பினால் ஒன்றாய் பொருள் தன்மையால் வேறாய் இருப்பவர்` என்னும் சித்தாந்த அத்துவித ஞானத்தில் நிலைபெற்று நின்று, பொருளில்லாத சூனியம்` எனத்தக்க பல சமயத் தொடக்கி னின்றும் நீங்கி, அந்தச் சமயங்கள் அனைத்திற்கும் மேலே உள்ள முதற் பொருளாகிய, அறியப்படுபொருளாம் சிவனை, அவனது திருவடி ஞானத்தின்வழியே சென்று பொருந்திப் பின் அவனேயாகி விடுதலே சித்தாந்த ஞானத்தின் பயனாகும்.Special Remark:
நிராகாரம் - உருவின்மை; என்றது பொருள் யாதும் இல்லாத சூனியத்தை. மூன்றாம் அடியில் `நின்று` என்பது பாடம் அன்று `பராபரை` என்பது பாடமாயின், ``பாதம்`` என்பதற்கு `நிபாதம்` எனப் பொருள் உரைத்து, ``நேயத்தை`` என்பதை அதன் பின்னர்க் கூட்டியுரைக்க. ``சென்று`` என்பதன்பின், `தலைப்பட்டு` என்பது எஞ்சிநின்றது.இதனால், அசுத்த சைவம். மார்க்க சைவம் என்பவற்றது நிலை இனிது விளங்குவதற்குச் சுத்தசைவத்தினது சிறப்புக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage