
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 3. மார்க்க சைவம்
பதிகங்கள்

பொன்னால் சிவசா தனம்பூதி சாதனம்
நன்மார்க்க சாதன மாஞான சாதனம்
துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனம்
சன்மார்க்க சாதன மாம்சுத்த சைவர்க்கே.
English Meaning:
Jnana Path is for Suddha SaivamThe golden emblems of Siva
And the holy smear of ashes
Apt are they the insignia
Of those in Saiva Path stand
But the path of Jnani
Is the path that no evil ever crosses
That his emblem, the holy path of Sanmarga (Jnana)
So beloved of Suddha Saiva.
Tamil Meaning:
சுத்த சைவநிலையை அடைய வேண்டுவார் கொள்ளத்தக்க முதற் சாதனங்கள், பொன்னாற் பொதியப்பட்ட உருத்திராக்கங்களின் மாலை, விபூதி என்னும் இரண்டுமாம். இவை நன்மையைத் தருகின்ற பெரிய ஞான சாதனமும், தீமை தோன்றாவாறு செய்கின்ற பெரிய காப்புச் சாதனமுமாம். ஆதலால், அவர்கட்கு இவை இன்றியமையாச் சாதனங்களாகும்.Special Remark:
எனவே, `இச்சாதனத்தளவில் நிற்போர் ஒரு கூற்று மார்க்க சைவர்` என்றதாயிற்று. முதற்கண் ``சாதனம்`` என்றது உருத்திராக்கத்தை, இதனை ``எவரேனும் தாமாக இலாடத்திட்ட திருநீறும் சாதனமும் கண்டால்``1 என்பதிலும் காண்க.இதனால், மார்க்க சைவத்துள் ஒரு பகுதி கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage