
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 3. மார்க்க சைவம்
பதிகங்கள்

பூரணந் தன்னிலே வைத்தற்ற அப்போதத்
தாரண வந்த மதிசித்தாந் தத்தொடு
நேரென ஈராறும் நீடும் நெடும்போகம்
காரண மாம்சுத்த சைவர்க்குக் காட்சியே.
English Meaning:
Vision of Suddha Saivam PathThey fixed their thoughts on Perfection
And lost consciousness of Self`s existence
They have reached the End of Vedas;
They followed the Twelve-Way route
To divine rapture
—That their vision is,
Those of Suddha Saiva Way.
Tamil Meaning:
சுத்த சைவராய் உள்ளார்க்கு உளதாகின்ற அனு பவத்திற்கு, எங்கும் நிறைந்த பொருளாகிய சிவனிடத்தே வைக்கப் பட்டதனால் பிற பற்றுக்கள் நீங்கிய ஆன்ம போதத்தில், வேதாந்தம், சித்தாந்தத்தோடு ஒற்றுமைப் பட்டுத் தோன்றப்பெற்ற உணர்வோடு, பிராசாத கலைகள் பன்னிரண்டும் காட்சிப்பட, அதனால் இடையறாது விளங்கும் பேரின்பமே காரணமாம்.Special Remark:
அதனால், அத்தகைய பிராசாத யோகத்தில் நிற்பவர் மார்க்க சைவராதல் பெறப்பட்டது. இம்மந்திரத்தில் பாடங்கள் மிகத் திரிந்துள்ளன. `காட்சிக்கு` என்னும் நான்கனுருபு இன்னோசை நோக்கித் தொகுக்கப்பட்டது.இதனால், பிராசாத யோக நெறியும் மார்க்க சைவமாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage