
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 3. மார்க்க சைவம்
பதிகங்கள்

வேதாந்தங் கண்டோர் பிரமவித் தியாதரர்
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள்
வேதாந்த மல்லாத சித்தாந்தங் கண்டுளோர்
சாதா ரணர் அன்ன சைவர் உபாயரே.
English Meaning:
Vedanta and SiddhantaThe Vedantins envision Brahman
Adepts are they in Brahmaic art;
They hold all phenomena as illusion entire,
Those who envision Nadanta
Are yogis unwavering;
But Siddhanta that accords not with Vedanta,
Is the common Saiva`s lot.
Tamil Meaning:
சிவாகமங்களை உணராது வேதாந்தத்தை மட்டும் உணர்ந்தோர் முதற் பொருளை உண்மை மாத்திரையான் உணர்ந் தவரே. அதன் இயல்பையும், அதனைப் பெறுமாற்றையும் பெற்றவழி உளதாகும் பயனையும் அறிந்தவரல்லர். பிராசாத நெறியால் நாத முடிவைக் கண்டவர் அசைவில்லாத யோகிகளோயவர்; ஞானிகள் அல்லர். சைவாகமங்களை வேதாந்தத்தோடு ஒற்றுமைப்படவைத்து உணராது தனிப்ப வைத்து உணர்ந்தோர் பொதுச் சைவரே; உண்மைச் சைவர் அல்லர். ஆதலால், அவர் மார்க்க சைவரே; சுத்த சைவர் அல்லர்.Special Remark:
இதன் ஈற்றடியின் பாடம், ``சாதாரணர்; அன்ன சைவர் உபாயரே`` என இங்குள்ளபடியாவது, ``சாதாரணர் அன்னர்சைவம் உபாயமே`` என்றாவது ஓதப்படல் வேண்டும். மார்க்க சைவருள் இங்குக் கூறப்பட்ட சாதாரண சைவர் பாசுபதர் முதலிய அகப்புறச் சமயிகள் என்க. இவரைக் கூறுவார், மேற்கூறிய மார்க்க சைவரை அனுவதித்தும், புறச் சமயத்தாராகிய ஏகான்மவாதரைப் புடைபட வைத்தும் கூறினார்.இதனால், சிவாகமத்தைப் பொதுவாக உணர்தலும் மார்க்க சைவமாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage