
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 3. மார்க்க சைவம்
பதிகங்கள்

சத்தும் அசத்தும் தணந்தவர் தானாகிச்
சித்தும் அசித்தும் தெரியாச் சிவோகமாய்
முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினோர்
சித்தியும் அங்கே சிறந்துள தானே.
English Meaning:
Sakti`s Grace for Jnani in Suddha SaivamThey transcended categories Real and Unreal
That cognize neither Chit nor Achit
They attuned themselves to Sivoham meditation,
And in Mukti, in the bliss of Sakti
They were immersed deep,
And there
All Siddhis abounded in surpassing prowess.
Tamil Meaning:
எங்குமாய் நிற்கும் அருட் சத்தியை அடைந்து நிற்கும் நிலைக்குமேலே, எல்லாப் பொருளையும் கடந்த பராசத்தியை அடைந்தவர், அச்சத்திக்கு முதலாய பரசிவமேயாய், சித்தும் சடமு மாய உலகங்களுள் யாதும் தோன்றாது சிவோகம் பாவனையில் அழுந்தி, பரமுத்தி நிலையில் விளையும் பேரின்பமாகிய ஆனந்த சத்தியில் மூழ்கி யிருப்பர். அவரது பேறே ஏனை எல்லார் பேற்றினும் சிறந்த பேறாகும்.Special Remark:
``தணந்தவர்`` என்று மேற்கூறிய ``தணந்தபரையை`` அடைந்தவர் என்றவாறு. எல்லாமாய் நிற்பவள் அருட் சத்தியும், எல்லாவற்றையும் கடந்து நிற்பவள் ஆனந்த சத்தியும் ஆதலின் அந் நிலையே முடிந்த பேறாயிற்று. `உளது` என்பது ஈறு தொகுத்தலாயிற்று. `உளதாமே` எனப் பாடம் ஓதலுமாம்.இதனால், `மேற் கூறப்பட்டவர் மார்க்க சைவரேயாயின், அவருக்கு மேலேயுள்ள சுத்தசைவாராவார் யாவர்? என்னும் ஐயத்தினை நீக்குதற்கு. `அருள் நிலையைக் கடந்து ஆனந்த நிலையை எய்தினோர் சுத்த சைவர்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage