ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. உதயத்தில் விந்துவில் ஓம்முதற் குண்டலி
    உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான்
    விதியிற் பிரமாதி கள்மிகு சத்தி
    கதியிற் கரணம் கலைவை கரியே.
  • 10. வித்தினி லன்றி முளையில்லை அம்முளை
    வித்தினி லன்றி வெளிப்படுமா றில்லை
    வித்தும் முளையும் உடனன்றி வேறல்ல
    அத்தன்மைத் தாகும் அரன்நெறி காணுமே.
  • 11. அருந்திய அன்ன மவைமூன்று கூறாம்
    பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்ன
    திருந்தும் உடல்மனம் ஆங்கது சேர்ந்திட்டு
    இருந்தன முன்னாள் இரதம தாகுமே.
  • 12. இரதம் முதலான ஏழ்தாது மூன்றின்
    உரிய தினத்தின் ஒருபுற் பனிபோல்
    அரிய துளிவிந்து வாகும் ஏழ்மூன்றின்
    மருவிய விந்து வளருங்கா யத்திலே.
  • 13. காயத்தி லேழ்மூன்று நாளிற் கலந்திட்டுக்
    காயத்து டன்மன மாகும் கலாவிந்து
    நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்
    மாயத்தே செல்வோர் மனத்தோ டழியுமே.
  • 14. அழிகின்ற விந்து அளவை யறியார்
    கழிகின் றதனையுட் காக்கலும் ஓரார்
    அழிகின்ற காயத் தழிந்தயர் வுற்றோர்
    அழிகின்ற தன்மை யறிந்தொழி யாரே.
  • 2. செய்திடும் விந்துபே தத்திறம் ஐயைந்தும்
    செய்திடும் நாதபே தத்திறன் நாலாறும்
    செய்திடும் மற்றவை ஈரிரண் டின்திறம்
    செய்திடும் ஆறாறு சேர்தத் துவங்களே.
  • 3. வந்திடு பேத மெலாம் பரவிந்து
    தந்திடும் மாமாயை வாகீசி தற்பரை
    உந்து குடிலையோடு ஓம்உறு குண்டலி
    விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே.
  • 4. விளங்கு நிவிர்த்தாதி மேவக ராதி
    வளங்கொள் உகார மகாரத்துள் விந்து
    களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி
    உளங்கொள் மனாதி உளமந்த மாமே.
  • 5. அந்தமு மாதியு மாகிப் பராபரன்
    வந்த வியாபி யெனலாகு மந்நெறி
    கந்தம தாகிய காரண காரியம்
    தந்தைங் கருமமுந் தான்செய்யும் வீயமே.
  • 6. வீயம தாகிய விந்துவின் சத்தியால்
    ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக்
    காயஐம் பூதமும் காரிய மாயையில்
    ஆயிட விந்து அகம்புற மாகுமே.
  • 7. புறமக மெங்கும் புகுந்தொளிர் விந்து
    நிறமது வெண்மை நிகழ்நாதம் செம்மை
    உறமகிழ் சத்தி சிவபாத மாய்உள்
    திறனொடு வீடளிக் கும்செயல் கொண்டே.
  • 8. கொண்ட இவ்விந்து பரமம் போற்கோதற
    நின்ற படம்குடி லாய்நிலை நிற்றலின்
    கண்ட கலாதியின் காரண காரியத்து
    அண்டம் அனைத்துமாய் மாமாயை யாகுமே.
  • 9. அதுவித்தி லேநின்றங் கண்ணிக்கும் நந்தி
    இதுவித்தி லேயுள வாற்றை உணரார்
    மதுவித்தி லேமலர் அன்னம தாகிப்
    பொதுவித்தி லேநின்ற புண்ணியந் தானே.