
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 20. விந்துற்பனம்
பதிகங்கள்

செய்திடும் விந்துபே தத்திறம் ஐயைந்தும்
செய்திடும் நாதபே தத்திறன் நாலாறும்
செய்திடும் மற்றவை ஈரிரண் டின்திறம்
செய்திடும் ஆறாறு சேர்தத் துவங்களே.
English Meaning:
Thirty Six Tattvas EvoluteBindu attains modification five times five (twenty-five)
Nada attains modification four and six (ten)
The, rest two — Sakti and Siva — attain no modification
But activate the other two — Bindu and Nada.
Tamil Meaning:
நவந்தரு பேதங்களில் நாதங்களும், விந்துக்களும் முறையே சிவமும், சத்தியும் ஆதலால் சிவனது `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூற்று நிலைகளுள் அதிகார நிலையாகிய மகேசுரனது பேதங்கள் இருபத்தைந்தினையும் `சத்தியின் காரியங்கள்` என்றும், நவந்தரு பேதங்களில் விந்து, சத்தி இவை யொழிந்த ஏழும், குணமூர்த்திகள் மூவரும் ஆகப் பதின்மரும் நாயக, நாயகி பாவத்தில் நாயகர்கள் ஆதலால் அவர்களையே, `சிவ பேதங்கள்` என்றும் ஒருவாறு கூறலாம். இனி அந்தச் சத்தி சிவங்கள் ``சகுணம், சமலம், நின்மலம், ஆனந்தம்`` என்னும் காரணத்தால் நான்காகின்ற மாயையின் வகை மூன்றினின்றும் முப்பத்தாறு தத்துவங்களையும் வகைப்படத் தோற்றுவிக்கும்.Special Remark:
``செய்திடும்`` நான்கில் முதல் இரண்டையும் `அங்ஙன மாகச் செய்யும்` என்னும் பொருளையுடைய முற்றாக்கி, திறன் என்னும் எழுவாய்கட்குப் பயனிலைகளாக்குக. மூன்றாவதனைப் பெயரெச்சமாக்கி, அதனை ``அவை`` என்பதனோடு முடிக்க. மற்று - வினை மாற்று. `அவை, ஈரிரண்டினின்றும் தத்துவங்களைத் திறம் செய்திடும்` என இயைக்க.இதனால், சுத்த மாயையாகிய விந்துவில் நிற்கும் சத்தி சிவங்களின் செயல்கள் ஒருவாறு வகுத்துரைக்கப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage