
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 20. விந்துற்பனம்
பதிகங்கள்

அதுவித்தி லேநின்றங் கண்ணிக்கும் நந்தி
இதுவித்தி லேயுள வாற்றை உணரார்
மதுவித்தி லேமலர் அன்னம தாகிப்
பொதுவித்தி லேநின்ற புண்ணியந் தானே.
English Meaning:
Bindu is the Seed in the body and Divine Swan in CosmosThere in the Bindu,
Nandi stands His Grace to bestow;
That it is in their Bija within, they know not;
That Seed as scented flower in the (body) into microcosm blossoms
As a Divine Swan So-ham in the macrocosm it is;
He the Blessed One that is the Causal Seed of all.
Tamil Meaning:
`அது` எனச் சேய்மையாதாகச் சுட்டிச் சொல்லப் படுகின்ற மகாமாயையாகிய அந்த விந்துவிலே நின்று, அதனை அடைந்தவர்க்கு இனிப்பவனாகிய சிவன், `இது` என அண்மையாகச் சுட்டிச் சொல்லப்படுகின்ற சுக்கிலமாகிய இந்த விந்துவிலும் நின்று உயிர்களைப் பிறப்பித்துப் பின் வீடடையச் செய்தலை உணரும் உணர்வுடையார் உலகத்து அரியர், ஆயினும், மகாமாயையையே தனக்கு உடமாகக் கொண்டு விளங்குகின்ற அந்தப்பெருமான், நீரால் உண்டாக்கின்ற உணவுப்பொருளில் தங்கிப் பின் கருவுற்பத்திக்கு யாவரிடத்தும் பொதுவாய் உள்ள காரணமாகின்ற விந்துவிலும் இருக்கும் புண்ணியன் ஆகின்றான்.Special Remark:
இதனுள் ``விந்து`` என்றன `முதற்காரணம்` என்றவாறு. ``தானே`` என்பதை, ``உணரார்`` என்பதற்குப் பின் எடுத்துக்கொண்டு உரைக்க. சுவையைச் சிறப்புக் குணமாக உடைமை பற்றி நீரை ``மது`` என்றார். மலர்தல், விருத்திப்படுதல். சூக்கும தேகியாய் நிற்கும் உயிர் முதற்கண் பயிர்களில் தங்கியே பின்னர் உணவாய் ஆண் உடம்பிற் செல்லுதலைப் பஞ்சாகினி வித்தை பற்றி அறிக. தாவரங்களிலிருந்து உண்டாகும் உணவுப் பொருளால் ஆனதே தூலசரீரம். (பருவுடம்பு) அதனால் அஃது `அன்னமய கோசம்` எனப்படுகின்றது. அதன் சிறப்பு, `தைத்திரீயம்` என்னும் உபநிடதத்தில் சொல்லப்பட்டது. சிவனுக்கு இடமான சிவதத்துவங்கள் சுத்த மாயாகாரியம் ஆதல் பற்றியும், அதன்கண் உள்ள புவனங்கள் முத்தியுலகங்கள் ஆதல் பற்றியும் சிவனை, ``அதுவித்திலே நின்று அங்கு அண்ணிக்கும் நந்தி`` என்றார்.இதனால், பிண்டத்திற்குக் காரணமான விந்து அண்டத்திற்குக் காரணமாயுள்ள விந்துவோடொப்பதாய், சிவனுக்கு இடமாகும் சிறப்புக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage