
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 20. விந்துற்பனம்
பதிகங்கள்

அந்தமு மாதியு மாகிப் பராபரன்
வந்த வியாபி யெனலாகு மந்நெறி
கந்தம தாகிய காரண காரியம்
தந்தைங் கருமமுந் தான்செய்யும் வீயமே.
English Meaning:
Bindu is the Causal Seed of Five ActsThe Parapara that is the End and the Beginning
Immanent, He expands thus;
As Cause and Effect, too, well He is;
And as Bija
The Five Acts performs.
Tamil Meaning:
முதல்வன் உலகத்திற்கு முதலும், முடிவுமாகி, அதனுள் எங்கும் நிறைந்து நிற்கும் முறைமையால் பல தொகுதிகளாய் நிற்கும் காரண காரியப் பொருள்களைத் தோற்றுவித்து, அவன் ஐந் தொழில் செய்ய முதற்கருவியாய் நிற்பது விந்துவாகிய சுத்த மாயையே.Special Remark:
மாயையினின்றும் தோன்றும் தத்துவங்களில் சில தம்மினின்றும் பிற தத்துவ தாத்துவிகங்கள் தோன்றுதற்குக் காரண மாகவும், அவ்வாறன்றிக் காரியமேயாகவும் நிற்றல் பற்றி, ``கந்தம தாகிய காரண காரியம்`` என்றார். கந்தம் - கூட்டம்; தொகுதி. மாயை காரியப் படுதல் முதல்வனது சந்நிதியின்றி அமையாமை பற்றி, `வியா பியாய நெறியால் செய்யும் வீயம்` என்றார். `நெறியால்` என உருபு விரிக்க. முதற்கருவியாகும் சிறப்பு நோக்கி,``ஐங்கருமமும்தான் செய்யும்`` என அதனையே வினைமுதல்போலக் கூறினார். வீயம், `பீசம்` என்பதன் திரிபு. பீசம் - விதை; என்றது முதற்காரணத்தை.இதனால் முதற்காரணமாகிய விந்து முதல்வனது சந்நிதி யானே காரியப்படுதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage