
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 20. விந்துற்பனம்
பதிகங்கள்

அழிகின்ற விந்து அளவை யறியார்
கழிகின் றதனையுட் காக்கலும் ஓரார்
அழிகின்ற காயத் தழிந்தயர் வுற்றோர்
அழிகின்ற தன்மை யறிந்தொழி யாரே.
English Meaning:
Waste Bindu, the Body PerishesThey know not the destruction that wasting of Bindu results in;
They resolve not their decay to prevent by will power determined;
They who thus perish in this perishing body
Know not the way they perish;
And give it up not.
Tamil Meaning:
உலகர் தாம் செல்கின்ற போக நெறியால் அழிந் தொழிகின்ற விந்துவினது ஆற்றலை, `இவ்வளவினது` என்று அறிய மாட்டார்கள். அதனால் கீழ்நோக்கி வீழும் இயல்புடைய அந்த விந்துவை அவ்வாறு வீழாது உள்ளே நிறுத்திக் காக்கும் வழியைப்பற்றி அவர்கள் எண்ணுவதும் இல்லை. அழிவைத் தனது இயல்பாக உடைய உடம்பினுள்ளே தங்கியிருந்து, அவ்வுடம்பால் உண்டாகின்ற பல இடுக்கண்களால் துன்பமுற்று மெலிகின்றவர்கள் தாம் பெற்றுள்ள பொருள்கள் அழியுந்தன்மை உடையவாதலை அறிந்து, அவ்வழியுந் தன்மையை நீக்கிக்கொள்ள மாட்டார்கள்.Special Remark:
எனவே, `அதனை நீக்கிக் கொள்ள வழி உண்டு` என வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டதாம். ``அளவு`` என்றது ஆற்றலின் அளவை. ஒரு துளிவிந்துவிற்குப் பல துளி சுக்கிலத்தின் ஆற்றலும் ஒரு துளிச் சுக்கிலத்திற்குப் பல துளிக் குருதியின் ஆற்றலும், ஒரு துளிக் குருதிக்குப் பல துளி இரதத்தின் (சாரத்தின்) ஆற்றலும் உள்ளன என்பர். அதனால் அத்துணை ஆற்றலையுடைய விந்துவை இழப்பவர் தமது பேராற்றலை இழந்தவ ராகின்றனர். `உயிர்கள் கீழ் நோக்கி வீழும் விந்துவை உடையன; இறைவன் அவ்வாறன்றி மேல் நோக்கிச் செல்லும் விந்துவை உடையன்; அதனால்தான் அவன் தனது நெற்றிக்கண் வழியாக முருகனைத் தரமுடிந்தது` என்றும், `உயிர்களின் விந்துக்கள் நீர்த் தன்மையையுடையன; இறைவனது விந்து அவ்வாறன்றி நெருப்புத் தன்மையையுடையது; அதனால் தான் ஒருமுறை அவனது விந்துவை உண்ட தேவர்கள் ஆற்றமாட்டாத வெப்பு நோயை உடையராய் அலமந்தனர்` என்றும் கூறுவர்.``ஊர்த்துவ ரேதம் விரூபாக்ஷம்``,
ருதம் ஸத்யம் பரம் ப்ரஹ்மபுருஷம் க்ருஷ்ண பிங்கலம் I
ஊர்த்வ ரேதம் விரூபாக்ஷம் விச்வ ரூபாய வை நமோ நம: II
எனப் புருஷ சூக்தத்தில் வந்துள்ளது. சிவபிரானது விந்துவை உண்ட தேவர்கள் வெப்பு நோயால் வருந்தினமை காஞ்சிப் புராண சுரகரேசப் படலத்தில் சொல்லப்பட்டது. போகத்தை விட்டு யோகியராயினோரும் இந்நிலையை எய்துவர் என்பது யோக நூற் கொள்கை. இதனால் அவர்க்கு இளமையும், யாக்கையும் நிலையாமையின் நீங்கி நிலைபேறுடையனவாதலோடு, உடம்பு புதியதோர் ஒளியும், அழகும் பெற்று விளங்கும் என்பதும் அந்நூற் கொள்கை.
இவ்வாறு இவ்வதிகாரம் முடிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage