
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 20. விந்துற்பனம்
பதிகங்கள்

விளங்கு நிவிர்த்தாதி மேவக ராதி
வளங்கொள் உகார மகாரத்துள் விந்து
களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி
உளங்கொள் மனாதி உளமந்த மாமே.
English Meaning:
Kalas Nada and Karanas evolveThe Kalas Nivirti and the rest,
In which repose sounds, ``A``, ``U`` and ``M`` composed
There in Nadanta Bindu enters
And into the Karanas that include the Mind
And the internal organs intellectual
Evolve manifesting these
The Bindu its act of creation ceases.
Tamil Meaning:
நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்திய தீதை என்னும் பஞ்சகலைகளில் முறையே பொருந்தி நிற்கின்ற அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம் - என்னும் சூக்கும பஞ்சாக்கரங்கள் முறையே மனம் முதலாகப் புருடன் ஈறாக உள்ள கருவிகளைச் செலுத்தி நிற்கும்.Special Remark:
``நிவிர்த்தாதி மேவு`` என்பது ஏழாம் வேற்றுமைத் தொகை. ``அகராதி, நாதாந்தம்`` என்பவற்றையும் அகரமாகிய ஆதியும், நாதமாகிய அந்தமும் எனச் செவ்வெண்ணாக்குக. உளம் - புருடன், அகாரம் முதலிய ஐந்தும் முறையே தூல வைகரி, சூக்கும வைகரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை என்னும் ஐவகை வாக்குக்களைக் குறிப்பன. அவை முறையே, அகங்காரம், புத்தி, மனம், சித்தம் என்னும் அந்தத் கரணங்கைளயும், புருடனையும் செலுத்தும் - என்பதையும், அதனாலேதான் உயிர்கட்குச் சவிகற்ப உணர்வு உண்டா கின்றது - என்பதையும் சிவஞான போதத்து முதலதி கரணத்தில் காண்க. ``மனாதி`` என்றது `அந்தக் கரணம் எனப் பொதுப் பொருள் தந்தது. அவற்றைச் செலுத்துவனவற்றை அவையேயாக உபசரித்தார்.பிரதிட்டையாதி கலைகளில் இயற்கையாய் நிற்கின்ற உகாரம் முதலிய நான்கும் உபாதி (கலப்பு) வசத்தால் கீழ்க்கீழ்க் கலைகளிலும் பொருந்தும் என்க.
அகரம் முதலிய ஐந்தும் பிரணவத்தின் கூறுகள் (கலைகள்) ஆகும்.
இதனால் சுத்தமாயை தனது காரியமாகிய நாதம் முதலியவை வாயிலாக உயிர்கட்குச் சவிகற்ப உணர்வைத் தருதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage