
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 20. விந்துற்பனம்
பதிகங்கள்

இரதம் முதலான ஏழ்தாது மூன்றின்
உரிய தினத்தின் ஒருபுற் பனிபோல்
அரிய துளிவிந்து வாகும் ஏழ்மூன்றின்
மருவிய விந்து வளருங்கா யத்திலே.
English Meaning:
How Bindu is Formed From FoodOne of the seven constituents food breaks into,
(Blood, Iymph, bone, skin, flesh, brain and semen)
The Bindu forms in days three
Like the tiny dew drop on a blade of grass;
And full matures in days three times seven.
Tamil Meaning:
மேல் சொல்லப்பட்ட `சாரம்` என்பது உட்பட ஏழ் தாதுக்களில் மூன்றிலிருந்து சில நாட்களில் புல் நுனியிற் பனியளவான துளிகள் பல உருவாகும். அந்தத் துளிகளே பிண்ட உற்பத்திக்குக் காரணமான `விந்து` எனக் குறிப்பிட்டுக் கூறப்படுகின்றன. அவை இருபத்தொரு நாள் வரையில் உடம்பினுள் அந்த நிலையிலே முதிர்ந்து வரும்.Special Remark:
தாது - மூலப்பொருள் `ஏழ் தாதுக்களில்` - என ஏழாம் உருபு விரித்துரைக்க. உடம்பிற்கு மூலமான ஏழு பொருள்களாவன மேற்கூறிய சாரம், குருதி, என்பு, தோல், ஊன், நிணம், சுக்கிலம் - என்பன. இவற்றின் நிலைபேற்றிற்கு ஒன்றிற்கு மற்றொன்று காரண மாகவேயிருக்கும். காரண நிலையில் `சுக்கிலம்` எனப்படுவதே காரிய நிலையில் `விந்து` என வேறுபட்டு நிற்கும் என்பது இங்கு அறிதற் குரியது இருபத்தொரு நாட்களுக்குப் பின் விந்து வேறொன்றாய் மாறும் என்பதும் இங்கு உணரத்தக்கது.இதனால், பிண்டத்திற்குக் காரணமான விந்து உண்டாகுமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage