
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- ஏழாம் தந்திரம் - 1. ஆறாதாரம்
- ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 3. பிண்ட லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 5. ஆத்தும லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 7. சிவலிங்கம்
- ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்
- ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு
- ஏழாம் தந்திரம் - 10.அருளொளி
- ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
- ஏழாம் தந்திரம் - 12. குருபூசை
- ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை
- ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை
- ஏழாம் தந்திரம் - 15. போசன விதி
- ஏழாம் தந்திரம் - 16. பிட்சா விதி
- ஏழாம் தந்திரம் - 17. முத்திரை பேதம்
- ஏழாம் தந்திரம் - 18. பூரணக் குகைநெறிச் சமாதி
- ஏழாம் தந்திரம் - 19. சமாதிக் கிரியை
- ஏழாம் தந்திரம் - 20. விந்துற்பனம்
- ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்
- ஏழாம் தந்திரம் - 22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 23. பிண்டாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 24. மனவாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 25. ஞானாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 26. சிவாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 27. பசு லக்கணம் - பிராணன்
- ஏழாம் தந்திரம் - 28. புருடன்
- ஏழாம் தந்திரம் - 29. சீவன்
- ஏழாம் தந்திரம் - 30. பசு
- ஏழாம் தந்திரம் - 31. போதன்
- ஏழாம் தந்திரம் - 32. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை
- ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை
- ஏழாம் தந்திரம் - 34. அசற்குரு நெறி
- ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி
- ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்
- ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்
- ஏழாம் தந்திரம் - 38. இதோபதேசம்
- ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்
Paadal
-
1. இலிங்கம தாகுவ தியாரும் அறியார்
இலிங்கம தாகுவ தெண்டிசை யெல்லாம்
இலிங்கம தாகுவ தெண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்த துலகே.
-
10. மறையவர் அற்சனை வண்படி கந்தான்
இறையவர் அற்சனை ஏய்பொன் னாகும்
குறைவில் வசியர்க்குக் கோமள மாகும்
துறையுடைச் சூத்திரர் சொல்வாண லிங்கமே.
-
11. போது புனைகழல் பூமிய தாவது
மாது புனைமுடி வானக மாவது
நீதியுள் ஈசன் உடல்விதம் பாய்நிற்கும்
ஆதி உறநின்ற(து) அப்பரி சாமே.
-
12. தரைஉற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம்
திரைபொரு நீரது மஞ்சனச் சாலை
வரைதவழ் மஞ்சுநீர் வான்உடு மாலை
கரைஅற்ற நந்தி கலைஉந்திக் காமே.
-
13. அதுஉணர்ந் தோன்ஒரு தன்மையை நாடி
எதுஉண ராவகை நின்றனன் ஈசன்
புதுஉணர் வான புவனங்கள் எட்டும்
இதுஉணர்ந் தென்னுடல் கோயில்கொண் டானே.
-
14. அகலிட மாய்அறி யாமல் அடங்கும்
உகலிட மாய்நின்ற ஊனத னுள்ளே
பகலிட மாம்உளம் பாவ வினாசன்
புகலிட மாய்நின்ற புண்ணியன் றானே.
-
2. உலகில் எடுத்தது சத்தி முதலா
உலகில் எடுத்தது சத்தி வடிவா
உலகில் எடுத்தது சத்தி குணமா
உலகம் எடுத்த சதாசிவன் றானே.
-
3. போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
ஆகமும் ஆறாறு தத்துவத் தப்பாலாம்
ஏகமும் நல்கி யிருக்கும் சதாசிவம்
ஆகம அத்துவா ஆறும் சிவமே.
-
4. ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் மீசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்
றார்த்தனர் அண்டங் கடந்தப் புறம்நின்று
சாத்தனன் என்னும் கருத்தறி யாரே.
-
5. ஒண்சுட ரோன் அயன் மால் பிர சாபதி
ஒண்சுட ரான இரவியோ டிந்திரன்
கண்சுட ராகிக் கலந்தெங்குந் தேவர்கள்
தண்சுட ராய்எங்கும் தற்பரம் ஆமே.
-
6. தாபரத் துள்நின் றருளவல் லான் சிவன்
மாபரத் துண்மை வபடுவா ரில்லை
மாபரத் துண்மை வபடு வாருக்கும்
பூவகத் துள்நின்ற பொற்கொடி யாகுமே.
-
7. தூய விமானமும் தூலம தாகுமால்
ஆய சதாசிவம் ஆகும்நற் சூக்குமம்
பாய பலிபீடம் பத்திர லிங்கமாம்
ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.
-
8. முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
கொத்தும்அக் கொம்பு சிலை நீறு கோமளம்
அத்தன்றன் ஆகமம் அன்னம் அரிசியாம்
உய்த்ததன் சாதனம் பூமணல் லிங்கமே.
-
9. துன்றுந் தயிர் நெய் பால் துய்ய மெழுகுடன்
கன்றிய செம்பு கனல்இர தம் சந்தம்
வன்றிறற் செங்கல் வடிவுடை வில்வம் பொன்
தென்றிருக் கொட்டை தெளிசிவ லிங்கமே.