
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்
பதிகங்கள்

போது புனைகழல் பூமிய தாவது
மாது புனைமுடி வானக மாவது
நீதியுள் ஈசன் உடல்விதம் பாய்நிற்கும்
ஆதி உறநின்ற(து) அப்பரி சாமே.
English Meaning:
Siva`s Pervasive FormThe Earth is His flower-bedecked feet
The Heavens, His Ganga-girt crown
His Body fills the Spaces Vast
In continuity unbroken;
Thus did Lord His Form assume
From Time`s Eternity Beginningless First.
Tamil Meaning:
அண்டமாகிய இலிங்கத்தில் பூமி சிவனது திருவடி களாயும், அண்ட முகடு திருமுடியாயும், வானம் திருமேனியாயும் அமையும், ஆகவே, அண்டமாகிய இலிங்கத்துடன் சிவன் நிற்றல் மேற்கூறியவாறாகும்.Special Remark:
மாது - கங்கை, ``உள், ஈசன்``, `உளனாகிய ஈசன்` எனப் பண்புத் தொகை, இது மேல் நின்ற `கழல், முடி` என்பவற் றோடும் இயைந்தது.இதனால் அண்டலிங்கம் சிவனது திருவடி முதலிய உண்மை உறுப்புக்களாய் நிற்கும் முறைமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage