
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்
பதிகங்கள்

உலகில் எடுத்தது சத்தி முதலா
உலகில் எடுத்தது சத்தி வடிவா
உலகில் எடுத்தது சத்தி குணமா
உலகம் எடுத்த சதாசிவன் றானே.
English Meaning:
Sakti in Sadasiva manifested as WorldIn the World His Sakti He manifested first,
In the World as His Sakti`s Form He pervaded
In the World His Sakti`s Powers He filled
But He who this World`s creation conceived
Was Sadasiva (the Linga).
Tamil Meaning:
உலகத்தைத் தோற்றுவித்த இறைவன் உலகில் அனைத்துப் பொருள்களையும் ஆக்கியது தனது சத்தியே பொருளாக வும், பொருளின் வடிவமைப்பாகவும், குணமாகவும் அமைத்தேயாம்.Special Remark:
`அதனால் உலகமே இலிங்கம் ஆதலில் ஐயமில்லை` என்பது குறிப்பெச்சம். `எல்லாம் சிவமயம்` என்றல், சிவன் சத்தியாய் நிற்கும் நிலைபற்றியே என்பது தெளிவாகலின், இவ்வாறு கூறினார். கூறவே, `சிவனது திருமேனி சத்தியாதல் பற்றி உலகமே இலிங்கமாதல் தெளிவாகும்` என்பதாம். ``பொருள்`` என்றது செயலாற்றலும், பயன் தருதலுமாகிய இவைபற்றி. `முதல்` எனினும் `பொருள்` எனினும் ஒக்கும். ஈற்றடியை முதலிற் கொள்க.இதனால், உலகமே இலிங்கமாதல் தெளிவிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage