
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்
பதிகங்கள்

தரைஉற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம்
திரைபொரு நீரது மஞ்சனச் சாலை
வரைதவழ் மஞ்சுநீர் வான்உடு மாலை
கரைஅற்ற நந்தி கலைஉந்திக் காமே.
English Meaning:
Siva`s Cosmic FormThe Earth is His Sakti Peeta,
The Heavens the Linga Pure,
The billowing seas His bathing ghat,
The cascading streams on mountain tops
Their cool water laves His crown heavenly
The countless stars, His garland;
The Eight Directions His limitless raiment.
Tamil Meaning:
இன்னும் அண்டலிங்கத்தில் பூமி பீடமாயும், வானம் பீடத்தின் மேல் உள்ள இலிங்கமாயும், கடல் நீர் திருமஞ்சனக் குட நீராயும், மேகம் அந்த நீரை முகக்கின்ற கலமாயும், திசைகள் எல்லையற்ற சிவனது உந்தியின்மேல் உடுக்கப்படும் உடையாயும் நிற்கும்.Special Remark:
`தரை, சத்தி` என இயையும். உள்ள - இலிங்கம் பொருந்தி நிற்கின்ற - பீடம் சத்தி வடிவாதல் பற்றி, ``சத்தி`` என்றார். நீர் - சால், குடம். `ஐ` `அழகிய நீர்` என்க. ``மஞ்சு நீர்`` என்பதில் உள்ள ``நீர்``, தானியாகு பெயர். கரை - எல்லை; என்றது திசையை. ``கரை`` என முன் வந்தமையின் ``அற்ற`` என்றே போயினார். `அற்ற நந்தி உந்திக்குக் கலை ஆம்` என மாற்றிக்கொள்க. உந்திக்கு - உந்திக்கண், வேற்றுமை மயக்கம்.இதனாலும் அண்டலிங்கம் சிவனது உபசார அங்க உபாங்கங்களாய் நிற்கும் முறைமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage