
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்
பதிகங்கள்

போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
ஆகமும் ஆறாறு தத்துவத் தப்பாலாம்
ஏகமும் நல்கி யிருக்கும் சதாசிவம்
ஆகம அத்துவா ஆறும் சிவமே.
English Meaning:
Sadasiva is the Adhvas tooWorldly joys and heavenly pleasures
Wisdom and miraculous powers
The body and the state beyond
The Tattvas six and thirty
All these Sadasiva granted;
The Adhvas six, too, of Agamas sacred
Are all but He — Sadasiva.
Tamil Meaning:
ஆன்மா முப்பத்தாறு தத்துவங்களினின்றும் நீங்கித் தான் தனித்து நிற்கும் நிலையையும், அதன்பின் அது தன்னைப் பெற்று நிற்கும் நிலையையும், அந்நிலைக்கண் விளைகின்ற தனது பரபோகத்தையும் தருதலேயன்றி, உடம்பும், அதனால் உண்டாகின்ற புலன் உணர்வும் அதனால் வரும் புலன் இன்பமும் என்னும் இவற்றையும் தந்து நிற்பான் சிவன் ஆதலின் அவன், சிவாகமங்களில் பாசக் கூட்டமாகச் சொல்லப்படுகின்ற ஆறத்துவாக்களாயும் விளங்குவான்.Special Remark:
`ஏகமும், முத்தியும், போகமும் - ஆகமும், புத்தியும், சித்தியும், என ஓதற்பாலதனைச் செய்யுள் நோக்கி முறை பிறழ வைத்தார். சிவன் தன்னையடையச் செய்தலே முத்தியாதலை நினைக. யோகம், ஏற்புழிக் கோடலால் பரபோகமாயிற்று. எண்ணிய எண்ணியாங் கெய்தும் உலகபோகத்தை, ``சித்தி`` என்றார். உயர்ந்தவற்றையும், தாழ்ந்தவற்றையும் உடன் வைத்துக் கூறிய குறிப்பால், `உயர்ந்தவற்றையேயன்றித் தாழ்ந்தவற்றைத் தருபவனும் சிவனே` என்பது போந்தது. தாழ்ந்தவற்றைத் தருதல் அவற்றின்கண் உவர்ப்புத் தோன்றுதற் பொருட்டு,``பந்தமும் வீடும் படைப்போன் காண்க``
-தி.8 திருவண்டப்பகுதி, 52
என்றாற்போலும் திருமொழிகளை நினைக.
`பாசமாகிய அண்டங்கள் அனைத்தையும் கடந்து நிற்பவ னாகிய சிவன் பாசங்களாகிய அண்டமாய் நிற்றல் எவ்வாறு என்னும் ஐயத்தை நீக்குதற்கு இவ்வாறு அருளிச் செய்தார்.
``அண்டமாய், ஆதியாய், அருமறையோ டைம்பூதப் பிண்டமாய் உலகுக்கோர் மெய்ப்பொருளாம் பிஞ்ஞகனை``
-தி.4 ப.7 பா,4
என நாவுக்கரசரும் அருளிச்செய்தார். இதனானே பிண்டமும் இலிங்க மாதற்கு ஐயமின்று என்பது பெறப்படும்.
இதனால் அண்டம் இலிங்கமாதல் பற்றி எழுவதோர் ஐயம் அறுக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage