ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. அந்த மிலாஞானி தன் ஆகம் தீயினில்
    வெந்திடில் நாடெலாம் வெந்திடும் தீயினில்
    நொந்தது நாய்நரி நுங்கிடில் நுண்செரு
    வந்துநாய்ந ரிக்குண வாம்வை யகமே.
  • 10. ஓதிடு வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம்
    மீதினில் இட்டா சனத்தினின் மேல்வைத்துப்
    போதுறு சுண்ணமும் நீறும் பொலிவித்து
    மீதி லிருத்தி விரித்திடு வீரே.
  • 11. விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
    பொரித்த கறிபோ னகம்இள நீரும்
    குருத்தலம் வைத்தோர் குழைமுகம் பார்வை
    தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே.
  • 12. மீது சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும்
    போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
    பாத உதகத்தால் மஞ்சனம் செய்துபார்
    மீதுமூன் றுக்குமூன் றணிநிலம் செய்யுமே.
  • 13. ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
    ஓதும் இரண்டினில் ஒன்றினைத் தாபித்து
    மேதகு சந்நிதி மேவுத் தரம்பூர்வம்
    காதலிற் கோடல் காண்உப சாரமே.
  • 2. எண்ணிலா ஞானி யுடல்எரி தாவிடில்
    அண்ணல்தன் கோயில் அழலிட்ட தாங்கொக்கும்
    மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
    எண்ணரு மன்னர் இழப்பர் அரசே.
  • 3. புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பது
    நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும்
    மண்ணி லழியில் மலங்காரப் பஞ்சமாம்
    மண்ணுல கெல்லா மயங்குமனல் மண்டியே.
  • 4. அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
    அந்த உடல்தான் குகைசெய் திருத்திடில்
    சுந்தர மன்னரும் தொல்புவி யுள்ளோரும்
    அந்தமில் இன்ப அருள்பெறு வாரே.
  • 5. நவமிகு சாணாலே நல்லாழம் செய்து
    குவைமிகு சூழலைஞ் சாணாகக் கோட்டித்
    தவமிகு முட்குகைமுக் கோணமுச் சாணாக்கிப்
    பவமறு நற்குகை பத்மா சனமே.
  • 6. தன்மனை சாலை குளங்கரை யாற்றிடை
    நன்மலர்ச் சோலை நகரில்நற் பூமி
    உன்னருங் கானம் உயர்ந்த மலைச்சாரல்
    இந்நிலந் தான்குகைக் கெய்தும் இடமே.
  • 7. நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்
    நிற்கின்ற பாதம் நவபாதம் நேர்விழப்
    பொற்பமர் ஓசமும் மூன்றுக்கு மூன்றணி
    நிற்பவர் தாம்செய்யும் நேர்மைய தாமே.
  • 8. பஞ்சலோ கங்கள் நவமணி பாரித்து
    விஞ்சப் படுத்ததன் மேல்ஆ சனமிட்டு
    முஞ்சி படுத்துவெண் ணீறிட் டதன்மேலே
    பொன்செய்நற் சுண்ணம் பொதியலு மாமே.
  • 9. நள்குகைநால் வட்டம் படுத்ததன் மேற்காகக்
    கள்ளவிழ் தாமம் களபம்கத் தூரியும்
    தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்து
    ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே.