
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 19. சமாதிக் கிரியை
பதிகங்கள்

ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
ஓதும் இரண்டினில் ஒன்றினைத் தாபித்து
மேதகு சந்நிதி மேவுத் தரம்பூர்வம்
காதலிற் கோடல் காண்உப சாரமே.
English Meaning:
Samadhi PujasUpon the platform plant
The sapling of peepal tree, or a Lingam holy,
Arrange the Sannidhi (face) toward north or east,
And perform pujas with rituals sixteen,
In devotion endearing.
Tamil Meaning:
இதன் பொருள் வெளிப்படை.Special Remark:
`குகையின் மேல் கோயில் எடுத்தபின் கருவறையில் ஒரு பீடத்தின்மேல் அரச மரமாயினும், இலிங்கமாயினும் இவற்றுள் ஒன்றை நிறுவி, நாள்தோறும் பதினாறு வகையான உபசாரங்களுடன் வழிபாடு செய்க` என்பதும், `கோயிலை வடக்கு நோக்கியதாக வேனும், கிழக்கு நோக்கியதாகவேனும் அமைக்க` என்பதும் இதனால் கூறப்பட்டன. `இன்னதை` நிறுவலாம்` என்பது குரு ஆணை பற்றியும், திருவருட் குறிப்பு நோக்கியும் அறியப்படும் எனக் கொள்க.`வாயிலை வடக்கு நோக்கியேனும், கிழக்கு நோக்கியேனும் அமைக்க` என்றதனால். `அதற்குமுன் திருமேனியும் அவ்வாறு இருத்தப் படும்` என்பதும், திருமேனி இருத்தப்பட்ட வகையிலே வாயிலும் அமைக்கப்படும்` என்பதும் உய்த்துணர்ந்து கொள்ளப்படும்.
கோயிலின் கருவறையிலே வில்வ மரம். பாத பீடிகை இவைகளை அமைத்தலும் மரபாக உள்ளது.
இங்ஙனம் இறுதியில் சமாதிக் கோயில்முறை சொல்லி முடிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage