
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 19. சமாதிக் கிரியை
பதிகங்கள்

பஞ்சலோ கங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்ததன் மேல்ஆ சனமிட்டு
முஞ்சி படுத்துவெண் ணீறிட் டதன்மேலே
பொன்செய்நற் சுண்ணம் பொதியலு மாமே.
English Meaning:
Samadhi RitualsIn abundance spread the five metals precious
And the nine gems rare;
Upon them place the seat,
Scatter the Kusha grass,
And shower the holy ashes white;
Above that scatter
Thumeric powder that is of colour gold
And incenses richly mixed.
Tamil Meaning:
நில அறையின் அடியில் ஐம்பொன்களும், ஒன்பான் மணிகளும் நிரம்ப இட்டு மூடி, அதன்மேல் மேற்கூறிய முக்கோண பீடத்தை அமைத்து, அதன்மேல் தருப்பையைப் பரப்பி, திருவெண்ணீற்றைத் திருமேனிக்கு அடியிலும், சுற்றிலும், மேலேயும் நிரம்ப இட்டு, அதன்மேல் பொன்னிறமாய் உள்ள நறுமணப் பொடியை மிகுதியாகத் தூவுதலும் சிறப்புடையதாகும்.Special Remark:
``ஐம்பொன்`` என்றது பெரும்பான்மை பற்றியே யாகலின். கரும்பொன் ஒழிந்தனவே கொள்க. பொன் செய் - பொன்னினது ஒளியைத் தருகின்ற.இது முதல் நான்கு மந்திரங்களால் திருமேனியை் பொதியுமாறே கூறப்படுகின்றது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage