
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 19. சமாதிக் கிரியை
பதிகங்கள்

தன்மனை சாலை குளங்கரை யாற்றிடை
நன்மலர்ச் சோலை நகரில்நற் பூமி
உன்னருங் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலந் தான்குகைக் கெய்தும் இடமே.
English Meaning:
Locations for Samadhi CaveOne`s own homestead, roadside, tank bund, riverbed,
Flowery grove, city`s common
Forest dense, and mountain valley high
—These the sites appropriate,
For the sepulchure to shape.
Tamil Meaning:
இதன் பொருளும் வெளிப்படை.Special Remark:
``தன்`` என்றது உடலை விட்டு நீங்கிய ஞானியை ``மனை`` என்றது ஆச்சிரமத்தையும், தங்கியிருந்த இடத்தையும் பொது வாகக் குறிக்கின்றது. சாலை - பெருவழி. `குளக்கரை, குளங்கரை` - விகற்பப் புணர்ச்சி. `யாற்றிடைத்திடல்` என்க. நற்பூமி - புனிதமான நிலம்.இதனால் நிலக்குகை அமைத்தற்குரிய இடங்கள் வரையறுத்துக் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage