
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 19. சமாதிக் கிரியை
பதிகங்கள்

நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்
நிற்கின்ற பாதம் நவபாதம் நேர்விழப்
பொற்பமர் ஓசமும் மூன்றுக்கு மூன்றணி
நிற்பவர் தாம்செய்யும் நேர்மைய தாமே.
English Meaning:
Dimension For the Sepulchure CaveFive feet on four sides all,
Nine feet straight deep,
Three feet each on the triangle`s sides
—These the dimensions,
Appropriate for the sepulchure to shape.
Tamil Meaning:
நில அறையின் மேலே அழகிய கோயில் ஐந்து அடிக்கு ஐந்து அடிச் சதுரமாய், உயரம் ஒன்பதடியாக மும்மூன்று அடி உயரத்தில் ஒவ்வொரு நிலையாய் மூன்று நிலைகள் தோன்றும்படி அமைத்தல் முறையாகும்.Special Remark:
``குகை`` என்பதன் பின், `மேல்` என்னும் பொருட் டாகிய கண்ணுருபு விரிக்க. ``வட்டம்`` என்றது. `சுற்றுப் பக்கம்` என்ற படி. `பாதம்` என்பது பலபொருள் தருமாதலின் `அடிக்கால்` என்பது உணர்த்துதற்கு ``அங்கபாதம்`` என்றார். அங்கம் - உடல் உறுப்பு. நில அறை இரண்டரை முழச் சதுரம் ஆதலின் அதன்மேல், `ஐந்தடிச் சதுரம்` என்பது அந்த நில அறையை உள்ளடக்கியிருப்பதாகும். நிற்கின்ற பாதம் - நிலத்தினின்றும் எழுந்து நிற்கும் வடிவையுடையது. ஓசம் - ஒளி. அஃது பெயராய் யாவரும் காண விளங்கி நிற்கும் கோயிலைக் குறித்தது. `அண்ணி என்பது இடைக் குறைந்து, ``அணி`` என நின்றது. அண்ணி நிற்பவர், ஞானியை அடுத்திருப்பவர்; மாணாக்கர் முதலாயினோர். ``செய்யும்`` என்னும் பெயரெச்சம் ``நேர்மை`` என்பதனோடு முடிந்தது.இதனால், நில அறையின்மேல் கட்டப்படும் சமாதி கோயிலின் அமைப்பு முறை கூறப்பட்டது. நில அறை அமைப்பு முறை கூறினமையின் அதனோடு இயையக் கோயில் அமைப்பு முறையும் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage