
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 19. சமாதிக் கிரியை
பதிகங்கள்

நவமிகு சாணாலே நல்லாழம் செய்து
குவைமிகு சூழலைஞ் சாணாகக் கோட்டித்
தவமிகு முட்குகைமுக் கோணமுச் சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மா சனமே.
English Meaning:
Samadhi RitualsWell dig the sepulchure,
Heap the earth five cubits around,
Shape it into a triangle
Three cubits on sides;
And there in Padmasana,
Seat the body.
Tamil Meaning:
குகையை (நில அறையை) ஒன்பது சாண் ஆழமும் ஒரு பக்கத்திற்கு ஐந்து சாண் சதுரமும் ஆகச் செய்து அடியில் திருமேனி தவநிலையில் அமர்கின்ற ஆசனம் பக்கத்திற்கு மூன்றாக முக் கோணமாக அமைத்து, அதன் மேல் திருமேனியைப் பதுமாசனமாக இருத்துக.Special Remark:
மூன்றாம் அடியில் `உட்குகை` என்னாது `குகை` என்றே ஓதின் தளை சிதைதலை நோக்குக. உட்குகை - குகைக்கீழ். `பத்மாசனமாக இருத்துக` என இறுதியில் ஆக்கத்துடன் ஒரு சொல் வருவித்து முடிக்க.இதனால் நிலக்குகை அமைத்து அதன்கண் திருமேனியை இருத்துமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage