
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 19. சமாதிக் கிரியை
பதிகங்கள்

விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறிபோ னகம்இள நீரும்
குருத்தலம் வைத்தோர் குழைமுகம் பார்வை
தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே.
English Meaning:
SamadhiHaving covered thus, level the four sides;
Place his sandals and ear rings,
And an image with face and eyes
Decked in dress appropriate;
Offer parched rice, food, and tender coconut.
Tamil Meaning:
குகையில் திருமேனியைச் சுற்றி ஆடையால் மூடியபின் குகையின் மேல நான்கு பக்கங்களிலும் பல வகையான படையற் பொருள்களை வாழைக் குருத்தின்மேல் மேல் இட்டு நிவேதித்த பின்பு திருமேனியைப் பரிவட்டத்தால் மூடிவிடுங்கள்.Special Remark:
படையற் பொருள்களை மேலே நிலத்தில் வாழைக் குருத்தின் மேல் நான்கு பக்கமும் இட்டு நிவேதித்தல் சூழ்ந்துள்ளோர் பலரும் கண்டு வணங்குதற்பொருட்டு. மற்றும் வானவரும் அப் பொழுது ஞானியை வணங்குவர் என்பது கருத்து. அலம் வைத்து - நிரம்ப இட்டு. குழை முகம் - அருள்புரிகின்ற ஞானியின் முகம். பார்வை தரித்தல் - நிவேதனங்களை ஞானி தான் பார்வை செய்து ஏற்றல். பரிவட்டம், ``வட்டம்`` என நின்றது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage