
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்
- எட்டாம் தந்திரம் - 2. உடல் விடல்
- எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்
- எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை
- எட்டாம் தந்திரம் - 5. அத்துவாக்கள்
- எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
- எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
- எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை
- எட்டாம் தந்திரம் - 9. முக்குண நிர்க்குணங்கள்
- எட்டாம் தந்திரம் - 10. அண்டாதி பேதம்
- எட்டாம் தந்திரம் - 11. பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல்
- எட்டாம் தந்திரம் - 12. கலவு செலவுகள்
- எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
- எட்டாம் தந்திரம - 14. அறிவுதயம்
- எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்
- எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை
- எட்டாம் தந்திரம் - 17. அடிதலை அறியும் திறங்கூறல்
- எட்டாம் தந்திரம் - 18. முக்குற்றம்
- எட்டாம் தந்திரம் - 19. முப்பதம்
- எட்டாம் தந்திரம் - 20. முப்பரம்
- எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்
- எட்டாம் தந்திரம் - 22. முத்துரியம்
- எட்டாம் தந்திரம் - 23. மும்முத்தி
- எட்டாம் தந்திரம் - 24. முச்சொரூபம்
- எட்டாம் தந்திரம் - 25. முக்கரணம்
- எட்டாம் தந்திரம் - 26. முச்சூனிய தொந்தத்தசி
- எட்டாம் தந்திரம் - 27. முப்பாழ்
- எட்டாம் தந்திரம் - 28. காரிய காரண உபாதி
- எட்டாம் தந்திரம் - 29. உபசாந்தம்
- எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை
- எட்டாம் தந்திரம் - 31. அட்ட தள கமல முக்குண அவத்தை
- எட்டாம் தந்திரம் - 32. நவாவத்தை அபிமானி
- எட்டாம் தந்திரம் - 33. சுத்தா சுத்தம
- எட்டாம் தந்திரம் - 34. மோட்ச நிந்தை
- எட்டாம் தந்திரம் - 35. இலக்கணாத் திரயம்
- எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்
- எட்டாம் தந்திரம் - 37. விசுவக் கிராசம்
- எட்டாம் தந்திரம் - 38. வாய்மை
- எட்டாம் தந்திரம் - 39. ஞானிகள் செயல்
- எட்டாம் தந்திரம் - 40. அவா அறுத்தல்
- எட்டாம் தந்திரம் - 41. பத்தியுடைமை
- எட்டாம் தந்திரம் - 42. முத்தியுடைமை
- எட்டாம் தந்திரம் - 43. சோதனை
Paadal
-
1. நாசி நுனியினின் நான்மூ விரலிடை
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்
பேசி யிருக்கும் பெருமறை அம்மறை
கூசி யிருக்கும் குணம் அது வாமே.
-
10. பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை
அருளது போற்றும் அடியவ ரன்றிச்
சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின்
மருளவர் சிந்தை மயங்குகின் றாரே.
-
11. வினையால் அசத்து விளைவ துணரார்
வினைஞானந் தன்னிலே விடாதுந் தேரார்
வினைவீட வீடென்னும் பேதமும் ஓதார்
வினையாளர் மிக்க விளைவறி யாரே.
-
2. கருமங்கள் ஒன்று கருதும் கருமத்(து)
உரிமையும் கன்மமும் உன்னும் பிறவிக்
கருவினை யாவதும் கண்டகன்(று) அன்பிற்
புரிவன கன்மக் கயத்துட் புகுத்துமே.
-
3. மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்
மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
மாயை மறைய மறையவல் லார்கட்குக்
காயமும் இல்லைக் கருத்தில்லை தானே.
-
4. மோழை அடைத்து முழைதிறந் துள்புக்குக்
கோழை அடைக்கின்ற(து) அண்ணற் குறிப்பினில்
ஆழ அடைத்தங் கனலிற் புறஞ்செய்து
தாழ அடைப்பது தன்வலி யாமே.
-
5. ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிகிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிந்தபின்
ஆசூசம் மானுடம் ஆசூசம் ஆமே.
-
6. ஆசூசம் இல்லை அருநிய மத்தருக்(கு)
ஆசூசம் இல்லை அரனைஅற் சிப்பவர்க்(கு)
ஆசூசம் இல்லையாம் அங்கி வளர்ப்போருக்(கு)
ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே.
-
7. வழிபட்டு நின்று வணங்கு மவர்க்குச்
சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்
குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்
கழிபட் டவர்க்கன்றிக் காணஒண் ணாதே.
-
8. தூய்மணி தூய்அனல் தூய ஒளிவிடும்
தூய்மணி தூய்அனல் தூர்அறி வார்இல்லை
தூய்மணி தூய்அனல் தூரறி வார்கட்குத்
தூய்மணி தூய்அனல் தூயவும் ஆமே.
-
9. தூயது வாளாக வைத்தது தூநெறி
தூயது வாளாக நாதன் திருநாமம்
தூயது வாளாக அட்டமா சித்தியாம்
தூயது வாளாகத் தூய்அடிச் செல்லே.