
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 33. சுத்தா சுத்தம
பதிகங்கள்

மோழை அடைத்து முழைதிறந் துள்புக்குக்
கோழை அடைக்கின்ற(து) அண்ணற் குறிப்பினில்
ஆழ அடைத்தங் கனலிற் புறஞ்செய்து
தாழ அடைப்பது தன்வலி யாமே.
English Meaning:
Kechari Mudra in Kundalini YogaCoursing the Prana Stream into the Eye-brow Centre
And opening the uvula cavity
Where phlegm gathers,
Stilling the breath there
In the way Yoga-Guru taught,
And warming it in the Fire (Kundalini) within
And restraining it to a measure low
Is to attain divine strength indeed.
Tamil Meaning:
ர் புறம் போய் வீணாவதற்கு உரிய, வயல்களின் சிறு புழை போல, விந்து வெளிச்சென்று வீணாகின்ற வழியாகிய குறியைச் செயற்படாமல் தடுத்து, பிராணனைச் சுழுமுனை வழியாகச் செலுத்தி அதனோடே மேல்நிலமாகிய ஆஞ்ஞையில் உணர்வினால் சென்று புகுந்து, அங்கு நிற்கின்ற நிலை சலித்தலை நீக்க முயலு மிடத்துச் சிவ நினைவால் அதனை அடியோடு நீக்கி, உடம்பையும் விரைவில் வீழ்ந் தொழியாதபடி யோகக் கனலால் கற்பஞ்செய்து தன்னைச் சிவத்திற்குள்ளே அடைத்து வைத்தலே ஒருவனுக்கு உண்மையான தன்வலிமையாகும்.Special Remark:
முழை. மலை முழை. சுழுமுனை நாடியை `மேரு` என்பதால், அதன் உள்வெளியை `மலைமுழை` என்றார். காயத்தைக் கற்பம் செய்தல் இப்பிறப்பிற்றானே சிவஞான முற்றுதற் பொருட்டேயாம்; என்னை? முற்றுப் பெறாதவழி மேலும் பிறப்பு வரும் ஆதலின் ``கோழை`` என்பது இங்குக் கோழைமையாகிய தளர்ச்சியைக் குறித்தது. தாழ்தல் - தங்குதல் ``வினைவலியும், தன் வலியும், மாற்றான் வலியும் - துணை வலியும் தூக்கிச் செயல்``3 என்ற விடத்துக் கூறப்பட்ட வலிமைகளிலும் ``தன் வலி`` என்றதே இன்றி யமையாதல் பற்றி `இச்செயலே உயிருக்குத் தன்வலியாம்` என்றார்.இதனால், மேற்கூறப்பட்ட இருவகை மாசுகளையும் கழுவுதற்கு ஒருவகைச் சாதனம் கூறப்பட்டது.
(இதன்பின் பதிப்புக்களில் காணப்படும், ``காயக் குழப்பனை`` என்னும் மந்திரம் ஏழாம் தந்திரத்து, `கூடா ஒழுக்கம்` என்னும் அதிகாரத்தில் வந்தது.)
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage