
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 33. சுத்தா சுத்தம
பதிகங்கள்

தூயது வாளாக வைத்தது தூநெறி
தூயது வாளாக நாதன் திருநாமம்
தூயது வாளாக அட்டமா சித்தியாம்
தூயது வாளாகத் தூய்அடிச் செல்லே.
English Meaning:
Purity in SilencePurity in Silence is the Way of Purity
Purity in Silence is Lord`s name;
Purity in Silence are Siddhis eight;
Purity in Silence are the Holy Feet.
Tamil Meaning:
`முதல்வனாகிய முக்கண்ணன் முன்னெறியாகிய* தனது நெறியை உலகிற்கு வைத்தது உயிர் தூயதாதற் பொருட்டேயாம். அந்நெறியிற் செல்வார்க்கு உறுதுணையாக அவன் வைத்தது அவனது திருப்பெயராகிய திருவைந்தெழுத்து மந்திரம். அந்த மந்திரத்தைப் பல்காலும் ஓதி உயிர் தூய்மையுற்றால் அட்டமா சித்திகள் தாமே வந்து அதனை அடையும். ஆதலின் உயிர் தூய்மை அடைவதற்கு முன்பு அங்ஙனம் தூயராயினார் சென்ற அடிச்சுவட்டில் செல்.Special Remark:
`நான்கு அடிகளிலும், வாள் தூயதாக` என மாற்றிக் கொள்க. வாள் - ஒளி; அஃது இங்கு அறிவுப் பொருளாகிய உயிரைக் குறித்தது. ``ஆக`` நான்கில் மூன்றாவது காரணப் பொருளிலும், ஏனைய காரியப் பொருளிலும் வந்தன. ``வைத்தது`` என்பதை இரண்டாம் அடியிலும் கூட்டுக. தூயவரது அடிச்சுவடும் தூயதே ஆம் என்க.இதனால், உண்மைத் தூய்மையை வேண்டுவோர் சிவ நெறியைப் பற்றிச் சிவமூல மந்திரத்தை எப்பொழுதும் ஓதுதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage