
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 33. சுத்தா சுத்தம
பதிகங்கள்

ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிகிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிந்தபின்
ஆசூசம் மானுடம் ஆசூசம் ஆமே.
English Meaning:
Mystery of Muladhara``Unclean, unclean,`` the ignorant say
They know not the place ``unclean`` is,
When they know the (Yogic) mysteries
Of that place ``unclean``
Then shall they find,
The human birth itself is unclean.
Tamil Meaning:
அறிவில்லாதவர்கள் தங்கள் உடம்பு அசுத்தத்தைத் தீண்டிவிட்டதனால் `தீட்டு உண்டாகிவிட்டது தீட்டு உண்டாகி விட்டது` என்று சொல்வார்கள். அவர்களில் ஒருவருமே, உண்மையில் தீட்டு எங்கு உண்டாகின்றது` என ஆராய்ந்தறியமாட்டார். யாராயினும் அதனை ஆராய்ந்து அறிவார்களோயானால் `உயிர் மக்கள் வடிவாய் உள்ள உடம்பைத் தீண்டியதே தீட்டு` என்பது அவர்கட்கு நன்கு புலப்பட்டுவிடும்.Special Remark:
`அசுத்தத்தைத் தீண்டுவதனால் தீட்டு உண்டாதல் உண்மையே. அந்தத் தீட்டு உடம்பிற்கு உண்டாவதைத் தங்களுக்கு உண்டானதாகவும், அதனைப் போக்கித் தூய்மை செய்வதால் தாங்கள் தூய்மை அடைந்துவிட்டதாகவும் கருதுதல் அறியாமை` என்பதாம். உண்மையை உணர்ந்தால், நாம் மானுட உடம்பைப் பற்றிக் கொண்டிருப் -பதே தீட்டு, என்பதும், `அதனைப் போக்கி இறைவனை அடைதலே நமக்குத் தூய்மை` என்பதும், விளங்கும். அவற்றை விளங்கிக் கொண்டவர்களே அறிவுடையோர் என்பது கருத்து. மாணாக்கர் செயற் பாலது மானுட உடம்பை நீக்குதலேயாதல் பற்றி, ``மானுடம் ஆசூசம்`` எனறாரேனும், `உடம்பாவன பலவும் ஆசுசமே` என்றலே கருத்து.மானுட உடம்பை,
``பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும்
பொழுகிய பொய்க்கூரை``3
என்றார்போலப் பலபடக் கூறுமாறு அறிக. `மக்கள் தங்கள் உடல் தீட்டைப்போக்கி உடலைத் தூய்மையாக்கிக் கொள்வதனாலே தாங்கள் தூயோராய்விட்டதாகக் கருதிக்கொள்ளுதல் அறியாமை` என்றபடி. இதனானே, `புறத்தூய்மை ஒன்றே உயிரை நற்கதி யடைவிக்கும்` எனக் கூறும் கூற்றுக்கள் போலியாதல் விளங்கும்.
இதனால், `புறத்தூய்மையையே பெரிதாக வலியுறுத்தியமை யாது, அகத்தூய்மையையே பெரிதும் வலியுறுத்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage