
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 33. சுத்தா சுத்தம
பதிகங்கள்

தூய்மணி தூய்அனல் தூய ஒளிவிடும்
தூய்மணி தூய்அனல் தூர்அறி வார்இல்லை
தூய்மணி தூய்அனல் தூரறி வார்கட்குத்
தூய்மணி தூய்அனல் தூயவும் ஆமே.
English Meaning:
Lord is Real PureHe is crystal pure, He is fire pure,
He emanates rays of Purity;
Where His source is, they know not,
They who know the Source,
Themselves,
Crystal pure and fire pure become.
Tamil Meaning:
உலகத்தில், மாசு நீங்கக் கழவுவப்பட்ட இரத்தினமும், தூய பொருள்களாலே வளர்க்கப்பட்ட தீயும் தூய ஒளியையே தரும். `அதுபோல உடம்பினுள் தூய ஒளிகளைத் தரும் தூய இரத்தினமும், தூய தீயும் எவை` என்பதை அறிபவர் உலகருள் எவரும் இல்லை அவற்றை அறிய வல்லவர்கட்கு அவை தாம் தூயவாய் இருத்தலேயன்றி உடம்பிற்குத் தூய்மையைத் தருவனவாய் அமையும்.Special Remark:
கழுவப்படுவதனால் தூய்மை அடைகின்ற மணி உயிர். இயல்பாகவே தூய்மையுற்றிருக்கின்ற தீ சிவம். `சாதனங்களைச் செய்தவழி உயிர் தூய்மையுற்றும், சிவம் பிராகசித்தும் புலால் உடம்பை ஒளியுடம்பாகச் செய்யும்` என்பது கருத்து.இதனால், `ஆன்ம சுத்தியே உண்மைத் தூய்மையாம்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage