
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 33. சுத்தா சுத்தம
பதிகங்கள்

மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்
மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
மாயை மறைய மறையவல் லார்கட்குக்
காயமும் இல்லைக் கருத்தில்லை தானே.
English Meaning:
Make Maya VanishWhen Maya veils Jiva,
The Truth of Vedas remains hidden;
When Maya leaves,
The Truth of Himself reveals;
Those who can make Maya vanish
Merge in God;
No more is body; no more is mind.
Tamil Meaning:
வேதங்களால் முடிநிலைப் பொருளாகக் கொள்ளப் பட்ட முதற்பொருள் உயிர்கட்கு வேறாய் இன்றி அவைகளிடத் திற்றானே இருக்கின்றது. ஆயினும், மாயா காரியங்களாகிய கருவிக் கூட்டங்கள் உயிரினது அறிவைத் தம் வயப்படுத்தியே வைத்திருத்தலால் உயிர்கள் அம்முதற்பொருளை அறியாதிருக்கின்றன. அதனால் முதற்பொருள் மறைந்து நிற்கும் பொருளாக அறியப்படுகின்றது. மாயா காரியங்களாகிய கருவிக் கூட்டங்களின் வயப்படாது விடுபட்டவர்க்கு அக்கருவிக் கூட்டங்கள் மறைந்துவிட, முதற்பொருள் வெளிப்பட்டுத் தோன்றும். அதன் பின்பும் அக்கருவிக் கூட்டங்கள் தம்மை மயக்காதபடி அம்முதற் பொருளுக்குள்ளே அடங்கி நிற்க வல்லவர்கட்கு உடம்பு இருந்தும் இல்லையாம். அதனால் அவை பற்றி யெழுகின்ற, `யான், எனது` என்னும் செருக்கும் இல்லையாம்.Special Remark:
ஆகவே, அவர்கள் உடம்பு நீங்கியபின் ``வானோர்க்கு உயர்ந்த உலகம் புகுதல்``* தெள்ளிது என்பதமாம்.``முந்திவட் டத்திடைப் பட்டதெல்லாம்
முடிவேந்தர் தங்கள்
பந்திவட் டத்திடைப் பட்டலைப்
புண்பதற் கஞ்சிக் கொல்லோ!
நந்திவட் டம்நறு மாமலர்க்
கொன்றையும் நக்கசென்னி
அந்திவட் டத்தொளி யான்அடிச்
சேர்ந்ததென் ஆருயிரே``
என்பனபோல ஆரூயிர்த் திருவிருத்தம்8 முழுவதும் அருளிச் செய்தமை காண்க. `அப்பொருளின்கண்` என, `உள்` எனப்பொருள் படும் ஏழாவது விரிக்க.
உலகியலில் வினை மாசே பெருமாசு ஆகலின் அது நீங்கு மாற்றை முன் மந்திரத்திற் கூறியபின், மாயை மாசு நீங்குமாறு இதனால் கூறப்பட்டது. `இம்மாசு நீக்கமே உண்மைத் தூய்மையாம்` என்பதும் கருத்து.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage