
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 43. சோதனை
பதிகங்கள்

உரையற்ற தொன்றை உரைத்தான் எனக்குக்
கரையற் றெழுந்த கலைவேட் பறுத்துத்
திரையற்ற என்னுடல் நீங்கா திருத்திப்
புரையற்ற என்னுட் புகும்தற் பரனே.
English Meaning:
Tat-Para Enters Within JivaHe taught me
The word that is beyond words;
He severed my desires
For learning limitless;
My body, restless as waves;
He in calmness fixed;
In my purified being within
He, the Tatpara, entered.
Tamil Meaning:
முதுமை காரணமாக வருகின்ற திரையில்லா (இளமையாகவே யிருக்கின்ற) என்னுடைய உடம்பை அவ்வாறே என்றும் அழியாதிருக்கும்படி வைத்து, `காமம், வெகுளி, மயக்கம்` என்னும் குற்றங்கள் அற்ற என்னுடைய உள்ளத்தில் புகுந்த சிவன், எனக்கு, அளவின்றிக் கிடக்கின்ற நூல்களின்மேல் செல்கின்ற அவாவை அறுத்து, சொல்லுக்கு எட்டாத ஓர் அரும்பொருளை எனக்கு உபதேசித்தான்.Special Remark:
`அதனையே யான் இத்தந்திரத்தில் கூறினேன்` என்றபடி. பின்னிரண்டடிகளை முதலில் வைத்து, முதல் அடியை இறுதியில் கூட்டியுரைக்க. உரையற்றது ஒன்று - சிவானுபவம். ``நூலறிவை மட்டுமே கொண்டு நான் இத்தந்திரத்தைக் கூறவில்லை` என்பதாம். ``அரன் அடி சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேனே``1 எனப் பாயிரத்துட் கூறினாராகலின், இது கூற வேண்டியதாயிற்று. `சரியை முதலிய நான்கனுள் முதல் மூன்றும் நூலறிவானே கூறினும் கூடும்; ஞானம் அத்தகையது அன்று` என்பதாம். `உடலை நீங்கா திருக்கச் செய்தான்` என்றது நெடுநாள் இருக்கச் செய்தான் என்றபடி.இதனால், `இத்தந்திரத்துள் ஞானம் இவ்வாற்றால் கூறி முடிக்கப்பட்டது` என முடிவுரை கூறினார்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage