
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 43. சோதனை
பதிகங்கள்

தொடர்ந்துநின் றான்என்னைச் சோதிக்கும் போது
தொடர்ந்துநின் றான்நல்ல நாதனும் அங்கே
படர்ந்துநின்(று) ஆதிப் பராபரன் எந்தை
கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே.
English Meaning:
I Found Love Within MeHe was with me
As I searched Him within me;
And continuous there He stood;
My Father, Paraparan,
Pervasive He stands;
And transcending beyond too,
He shows me the Way.
Tamil Meaning:
சிவபெருமான் சற்குருவாய் வந்து எனது ஆறு அத்துவாக்களையும் அவற்றில் உள்ள சஞ்சித கன்மங்களை நீக்கித் தூய்மை செய்யும் பொழுது, அந்தச் செயலிலே தொடர்ந்து நின்றான். பின்பு தூய்மையாகிவிட்ட அந்த அத்துவாக்களிலே அவனே தொடர்ந்து நின்றான். அதன் பின்பு எல்லாப் பொருளிலும் கலப்பினால் ஒன்றா -கியும், பொருள்தன்மையால் வேறாகியும் நிற்கின்ற அந்த நிலைகளை எனக்கு அறிவித்துக் கொண்டே யிருக்கின்றான்.Special Remark:
`அவன் அவ்வாறிருக்கும் நிலையை மறவாதிருத்தலே நான் செய்யத்தக்கது` என்பது இசையெச்சம். `அதனைச் செய்தால் சோதனை எதுவும் என்னை ஒன்றும் செய்யாது` என்பது கருத்து. சோதித்தலுக்குச் செயப்படு பொருள் அத்துவாக்களேயாதலின் அவை வருவிக்கப்பட்டன. ஆகவே, பின் தொடர்ந்து நிற்றற்கு அவையே இட மாயின ஆதலின், `அங்கே` எனச் சுட்டினார். அதில் உள்ள ஏகாரம் பிற இடங்களினின்றும் பிரித்த பிரிநிலை. நல்லநாதன் - சற்குரு. `சற்குரு வாவான் சிவனே` என்பதைப் பின்னர், `ஆதிப் பராபரன் எந்தை` என் பதனால் சுட்டினார். படர்தல் - எங்கும் நிறைதல். `படர்ந்து நின்றும், கடந்து நின்றும் அவ்வழி காட்டுகின்றான்` என்க. ஏகாரம், ஈற்றசை.இதனால், `இறைவன் உயிர்க்குயிராய் நின்று அறிவித்தலை மறவாமையே சோதனைகளினின்றும் நீங்கும் வழியாகும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage