
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 43. சோதனை
பதிகங்கள்

காலினில் ஊறும் கரும்பினிற் கட்டியும்
பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவினுள் நாற்றமும் போல் உளன் எம்மிறை
காவலன் எங்கும் கலந்துநின் றானே.
English Meaning:
Lord is ImmanentAs feel within breeze,
As sweet within sugarcane,
As ghee within milk,
As juice within fruit,
As fragrance within flower;
Immanent is my Lord;
Thus does the Lord pervade all.
Tamil Meaning:
எல்லாப் பொருள்களிலும் தங்கியிருத்தல் பற்றி, `இறை` என்றும், எல்லா உயிர்களையும் பாதுகாத்தல் பற்றி, `பதி` என்றும் சொல்லப்படுபவனாகிய எங்கள் சிவபெருமான், காற்றில் பரிசமும், கரும்பில் வெல்லமும், பாலில் நெய்யும், பழத்தில் சுவையும், மலரில் மணமும் போல, உயிர்களின் உள்ளங்களில் எல்லாம் இரண்டறக் கலந்து நிற்கின்றான்.Special Remark:
`அக்கலப்பினை அறிந்து, `சிவோஹமஸ்மி` எனப் பாவிக்கும் பாவனையில் உறைத்து நின்றால், சோதனைகளால் வரும் ஊறு யாதும் இல்லையாம்` என்பது கருத்து.``கசிந்த - தொண்டினொடும், உளத்து அவன்றான் நின்ற [கலப்பாலே
`சோகம்` எனப்பாவிக்கத் தோன்றுவன் வேறின்றி``*
என்னும் சிவஞான சித்தியைக் காண்க. எனவே, `அஹம்பிரஹ் மாஸ்மி` `சோஹமஸ்மி` என்பன. இக்கலப்புப் பற்றிக் கூறப்படுத லல்லது, `சோயம் தேவதத்தன்` என்பதுபோல, விட்டும் விடாத இலக்கணை வகையாற் கூறப்படுவன அல்ல` என்றவாறாம். உளம், உளன் - மகர னகர உறழ்ச்சி. `உளன் எங்கும் கலந்து நின்றான்` என்க.
இதனால், சோதனைகளில் சலியாது நிற்றற்குரிய வழிவகை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage