
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 43. சோதனை
பதிகங்கள்

விருப்பொடு கூடி விகிர்தரை நாடில்
பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல
இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்
நெருப்புரு வாகி நிகழ்ந்து நிறைந்தே.
English Meaning:
Lord is Like a Hidden Vein of GoldSeek Siva in love endearing;
As like the vein of gold
In recesses of a mountain,
My Lord in my thoughts abides;
He Who as Form of Fire stood.
Tamil Meaning:
எங்கள் சிவனார், தம்மை அன்பினால் நோக்கின், தம்முடைய சத்திபோல வந்து, அங்ஙனம் நோக்கி நிற்பவரது உள்ளத்தில், பேரறிவாய், உயிர்க்குயிராய் நிறைந்து, நீங்காதிருப்பார்.Special Remark:
பொருப்பகம் சேர்தரு பொற்கொடி, உமை; `சத்தி` எனற்பாலதை இவ்வாறு கூறினார். `முன்னர்ச் சத்திநிபாதம்போல வந்து, பின்னர்த் தாம் விளங்கி நிற்பார்` என்றபடி, `போல` என்பதன்பின், `வந்து` என ஒருசொல் வருவிக்க. ``நெருப்பு`` என்பது, `ஒளி` என்னும் பொருட்டாய், அறிவைக் குறித்து நின்றது. ``எங்கள் பிரானார்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. ``விகிர்தர்`` என்றது சுட்டளவாய் நின்றது. `மனத்திடை, நெருப்புருவாகி நிகழ்ந்து நிறைந்து இருப்பர்` என இயைத்துக்கொள்க.இதனால், `சோதனைக் காலத்திலும் அன்பு குறைதலாகாது` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage