
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை
பதிகங்கள்

அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்
அத்தத்தில் உத்தர மாகும் திருமேனி
அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும்
அத்தத்தில் தம்மை அடைந்திநின் றாரே.
English Meaning:
Siva-Guru Teaches the Four RishisThe Tapasvins (four)* sought of yore
The Way (of Truth) from the Lord;
He, the Gracious one,
Gave them answer by Divine Gesture (Chin mudra);
And as with their hands they held fast to His feet,
They reached the Way of Truth, their Self-realizing.
Tamil Meaning:
வேதாகமங்களின் அர்த்தத்திலே தெளிவு பிறவாமல் ஐயுற்று வினாவிய முனிவர்களை, அந்த வேதாமகப் பொருள்களில் முடிந்த பொருளாய் உள் அருட்டிரு மேனியானது தனது கையினாலே அணைத்துத் தழுவிக் கொள்ளுதலும், அவர்கள் அத்திருமேனியில் அமைந்த கைக்குறிப்பினாலே தம்மை உள்ளவாறு உணர்ந்துகொண்டார்கள்.Special Remark:
`அருந்தவரை` என்னும் இரண்டன் உருபு தொகுத்த லாயிற்று. ``உத்தரம்`` இரண்டில் முன்னது விடை; பின்னது முடிநிலை. மேனி - தக்கிணா மூர்த்தி அணையப் பிடித்தல் - அவர்களது தலைமேற் கை வைத்துத் தானாகச் செய்தல். அத்திரு மேனியின் கைக் குறிப்பு, சின்முத்திரை, இம்முத்திரை.``பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி``
என்பதையும்,
``பதியினைச் சென்றணு காபசு பாசம்``*
என்பதையும்,
``பதியணு கில்பசு பாசம்நில் லாவே``
என்பதையும் உணர்த்தும் அதனால் அருந்தவர் ``ஐயத்தின் நீங்கித் தெளிந்தனர்``* என்க. ``தம்மை அடைந்து நின்றார்`` என்றமையால், பின் தலைவனை அடைந்து நின்றமை சொல்ல வேண்டாவாயிற்று.
இதனால், `இவ்வதிகாரப் பொருளே முதல் ஆசிரியனாகிய தென்முகக் கடவுளால் முனிவர்க்கு உணர்த்தப்பட்டது` என்பது கூறிமுடிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage