
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை
பதிகங்கள்

அறிவறி வென்ற அறிவும் அனாதி
அறிவுக் கறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியின் பிறப்பறுந் தானே.
English Meaning:
Pati, Pasu, and Pasam—All Three EternalBeginningless is Jiva that of Knowledge speak
Beginningless is Lord, the source of all Knowledge,
Beginningless is Pasam, that binds knowledge
When God-Knowledge dawns,
No more will birth be.
Tamil Meaning:
உலகத்தாரால், `அறிவு, அறிவு` என்று சொல்லப் படுவதாகிய உயிர்களும் அனாதியே உள்ளன. அவற்றின் அறிவுக்கு அறிவாய் உள்ள இறைவனும் அனாதியே உளன். அறிவாகிய உயிர்களைக் கட்டியுள்ள அறிவற்றனவாகிய பாசங்களும் அனாதியே உள்ளன. ஆயினும் அனாதியாகிய சிவனது ஞான சத்தி உயிரி -னிடத்துப் பதியுமாயின், உயிர் பிறவித்தொடர்ச்சி அறப்பெறும்.Special Remark:
``அனாதி`` எனவே, ஆதியும், அந்தமும் இலவாயின. ஞானசத்தியே அருட்சத்தி என்க. அது பதிதலே சத்தி நிபாதம். `சத்தி நிபாதம் வந்தால் பிறப்பு அறும்` என்றாரேனும், `ஞானம் நிகழப் பிறப்பறும்` என்றலே கருத்தென்க.இம்மந்திரத்தில் கூறப்பட்டன, மேல், ``பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்``8 என்னும் மந்திரத்துக் கூறப்பட்டனவே யாதலின், அவை நெடுஞ்சேயவாயினமைபற்றி, இங்கு இயைபு படுதற் பொருட்டு மறிதுணர்த்தியவாறு.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage