
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை
பதிகங்கள்

ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடல்ஏ றெனநிற்கும்
ஆய பலிபீடம் ஆகும்நற் பாசம்ஆம்
ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.
English Meaning:
Pati-Pasu-Pasam Relationship Symbolised in TempleThe Pati (Lord) is the blessed Siva Linga,
The Pasu (Jiva) is the mighty bull in front stands,
The Pasa (Bond) is the altar;
Thus in the temple
The Lord stands,
For them that searching see.
Tamil Meaning:
சிவாலயங்களின் அமைப்பை உற்று நோக்கி உணரவல்லார்க்குக் கருவறையில் முதலிடத்தில் உள்ள இலிங்கமே பதியாயும், அவ்விலிங்கத்தின் திருமுன்பில் உள்ள இடபமே பசுவாயும், (உயிராயும்) இடபத்திற்குப் பின் உள்ள பலிபீடமே அடக்கிஒடுக்கப்பட்ட பாசமாயும் காட்சியளிக்கும்.Special Remark:
இடபம் இலிங்கத்தை நோக்கின் பலிபீடம் அதன் பின்னதாயும், இலிங்கத்தை நோக்காது வெளியை நோக்கின் இடபத்தின் முன்னதாயும் இருக்கும், இவை சிவத்தை நோக்கும் உயிர்கட்குப் பாசம் பிற்படுதலையும், சிவத்தை நோக்காது, உலகத்தை நோக்கும் உயிர்கட்குப் பாசம் முற்படுதலையும் உணர்த்தும்.சிவத்தை நோக்கும் உயிரைப் பாசங்கள் அடரமாட்டாது, இருந்தும் இல்லதாயக் கிடத்தலின், பலியிடப்படும் பீடமே பாசமாகின்றது. பாசத்தை, ``ஆகும் நற்பாசம்`` என்றும் இது பற்றி, `சன்மார்க்கமாகிய தத்துவப் பொருள்களே சிவாகமங்களில் சமய சங்கேதப் பொருள்களாகச் சொல்லப்பட்டுள்ளன` என்பது - இதனை
``சன்மார்க்க
சமய சங்கே தப்பொருளும் தான்ஒன் றாகப்
பன்மார்க்க நெறியினிலும் கண்ட தில்லை``
என வியந்து கூறினார் தாயுமான அடிகள்.
இதனால், `முப்பொருள்களின் இயல்பை ஆகமங்களைப் பற்றி உணரமாட்டாதார், சிவாலயங்களின் அமைப்பை நோக்கி யேனும் உணரற்பாலர்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage