
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை
பதிகங்கள்

ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவம்பரம் மேல்ஐந்தால்
ஆகிய சூக்கத்தில் ஐங்கருமம் செய்வோன்
ஆகிய தூலத்தீ சானனும் ஆமே.
English Meaning:
Creation ContinuesThe act of Creation continues;
With the Sukshma Maya that from Para arose
The Five High;
Bindu, Nada, Sakti, and Siva
In the Sukshma also arose the five-faces God
That the Five Acts perform,
(Creation, Preservation, Dissolution, Obfuscation and Redemption)
—He, the Isanan Pure.
Tamil Meaning:
அபரவிந்து, அபரநாதம், பரவிந்து, பரநாதம், பராசத்தி என்னும் மேலான ஐந்து நிலைகளில் நின்று சூக்கும ஐந்தொழில் செய்பவன். அருவத்தையும் கடந்த பரம சிவன். தூல ஐந்தொழிலைச் செய்பவன் மகேசுரன்.Special Remark:
சத்தி ஞானம், கிரியை முதலிய பாகுபாடின்றி நிலையில் பராசத்தியாம். ஞானம், கிரியை முதலியனவாகப் பாகுபட்டுப் பொதுவகை ஞானமாய் நிற்கும் நிலையில் பரநாதமாம். பொதுவைக்கிரியையாய் நிற்கும் நிலையில் பரவிந்துவாம். சிறப்புவகை ஞானமாய் நிற்கும் நிலையில் அபரநாதமாம். சிறப்பு வகைக் கிரியையாய் நிற்கும் நிலையில் அபரவிந்துவாம். இங்ஙனம் இவ்வைந்தையும் காண்க. விந்துவை முதலிற்கூறியது கீழிருந்து எண்ணும்முறை பற்றியாம். ``பரம்`` எனப் பின்னர்க் கூறினைமையின், `சத்தி, சிவம்` என்று பரவிந்து பரநாதங்களையாயிற்று. `அவ்விந்து நாதமும்` என்று எடுத்துக் கொண்டு, சூக்கத்து ஐங்கருமம் செய்வோன் சூக்கத்து ஐ` என மேலே கூட்டி முடிக்க. சூக்கத்து ஐ - அருவத்தையும் கடந்தலைவன். இங்கு, ``ஈசானன்`` என்று மகேசுரனை. என்னை? தூல ஐந்தொழிலைச் செய்தும், செய்வித்தும் நிற்பவன் அவனே யாகலின். அவன் தூல ஐந்தொழிலைச் செய்தும், செய்வித்தும் நிற்குமாறு வருகின்ற மந்திரத்தால் கூறப்படும்.இதனால், முன் மந்திரத்தில் தொகுத்துக் கூறப்பட்ட சூக்கும தூல ஐந்தொழில் நிகழ்ச்சிகளில் சூக்கும ஐந்தொழில் நிகழுமாறு வகுத்துக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage