
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை
பதிகங்கள்

நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ண லடிசேர் உபாயம தாகுமே.
English Meaning:
Anava Gives Longing for Pleasures and Maya Supplies ThemIn Pasam that binds,
Anava is I-ness;
And possessed of it,
The Jiva longs for Mayaic pleasure experiences;
Then on him descends heavenly Grace;
That indeed the Way
His Holy Feet to reach.
Tamil Meaning:
உயிர்களைப் பற்றியுள்ள பாசங்களில், `நான்` என்னும் முனைப்பை உண்டாக்குவது ஆணவமே. (இம் முனைப்பே, `தற்போதம்`) என்றும், `சீவ போதம்` என்றும் சொல்லப்படும். மாயையைக் கருவியாகப் பற்றி உயிர்கள் செயற்படும்பொழுது, இந்த `நான்` என்னும் முனைப்போடு செயற்படுவதால்தான் அவைகட்கு வினைகள் உண்டாகின்றன. `நான் செய்கின்றேன்` என்னும் உணர் -வோடு செய்தலால், அச் செயல்களின் பயனைச் செய்த உயிரையே நுகரச் செய்ய இறைவன் திருவுளங் கொள்கிறான். அதற்குக் காரணமும் அவன் அவ்வுயிர்கள் மாட்டு வைத்த கருணையே யன்றிப் பிறிதில்லை. அதனால், வினைப் பயனை ஊட்டுவித்தலும் அவை அவனது திருவடியை அடைதற்கு உபாயமேயாகும்.Special Remark:
`மாயையில் பண்ணிய ஊட்டல்` என்க. பண்ணிய, அன்பெறா அகஈற்று அஃறிணைப் பன்மை வினைப் பெயர். பண்ணி - பண்ணப்பட்டவற்றை. `ஊட்டற்குப் பரிந்தனன்` என்க. `அதுவும் போருளே` என எழுவாய் வருவிக்க. ``போருள்`` என்பதன்பின், `ஆதலான்` என்பது சொல்லெச்சமாய் எஞ்சிநின்றது.இதனால், இறைவன் உயிர்கள் செய்த வினைகளைத் தான் ஏற்றுக்கொண்டு, அவற்றின் பயனை அவைகளை நுகரச் செய்தற்குக் காரணம் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage