
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 13. காய சித்தி உபாயம்
பதிகங்கள்

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.
English Meaning:
Why I Preserve BodyBefore listening to the Shiva scriptures, I considered the body to be nothing but impure and despised it. After listening to the Shiva scriptures, I realized that within the body itself, there are many ways to attain benefit. Through this knowledge, I understood that the Lord has made a place for himself within the body. Now, I take care of my body with the intention that it does not get damaged.
Tamil Meaning:
சிவ நூல் கேட்பதற்கு முன்பு, உடம்பை அழுக்காகக் கருதி இகழ்ந்திருந்தேன். சிவ நூல் கேட்ட பிறகு, உடம்புக்குள் பயனடைதற்கான பல வழிகள் இருப்பதை அறிந்தேன். அந்த அறிவின் வழியே, இறைவன் உடம்புக்குள் தன் இடத்தை அமைத்திருக்கின்றான் என்பதையும் உணர்ந்தேன். ஆகவே, இப்பொழுது, உடம்பு கேடு ஆகாதவாறு கவனித்து பராமரிக்கிறேன்.Special Remark:
`இத்தகைய அறிவையும் செயலையும் நீவிரும் பெறுதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். இழுக்கு, குற்றம்; மாசு. இழுக்குடையதனை, `இழுக்கு` என்றார், `சிவ நூல் கேட்கும் முன்னர், கேட்டபின்னர்` என்பன இயைபெச்சமாய் வந்து இயையும். உறுதல், பயனைப் பெறுதல். உறுபொருள், உறுதற்கு ஏதுவாய பொருள்; என்றது வழியை. செய்யுளின் இடைக்கண்நின்ற ஏகாரங்கள் தேற்றம். கோயில் - ஆதார, நிராதார, மீதானங்களாகிய இடங்கள். ``இருந்து`` என்றது `குறிக்கொண்டிருந்து` என்றவாறு.இதனால். `உடம்பு, உயிர் நலத்திற்குக் கருவியாதல் இவ்வாறு என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage