
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- விநாயகர் வணக்கம்
- முதல் தந்திரம் - பாயிரம்
- முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
- முதல் தந்திரம் - 2. வேதச் சிறப்பு
- முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு
- முதல் தந்திரம் - 4. உபதேசம்
- முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை
- முதல் தந்திரம் - 6. செல்வம் நிலையாமை
- முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை
- முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை
- முதல் தந்திரம் - 9. கொல்லாமை
- முதல் தந்திரம் - 10. புலால் மறுத்தல்
- முதல் தந்திரம் - 11. பிறன்மனை நயவாமை
- முதல் தந்திரம் - 12. மகளிர் இழிவு
- முதல் தந்திரம் - 13. நல்குரவு
- முதல் தந்திரம் - 14. அக்கினி காரியம்
- முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம்
- முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை
- முதல் தந்திரம் - 17. வானச் சிறப்பு
- முதல் தந்திரம் - 18. தானச் சிறப்பு
- முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்
- முதல் தந்திரம் - 20. அறஞ்செயான் திறம்
- முதல் தந்திரம் - 21. அன்புடைமை
- முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்
- முதல் தந்திரம் - 23. கல்வி
- முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல்
- முதல் தந்திரம் - 25. கல்லாமை
- முதல் தந்திரம் - 26. நடுவு நிலைமை
- முதல் தந்திரம் - 27. கள்ளுண்ணாமை
Paadal
-
1. இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் மருளது வாமே.
-
10. விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும்என் னாருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சன மாமே.
-
2. இன்பம் பிறவிக் கியல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
அன்பிற் கலவிசெய் தாதிப் பிரான்வைத்த
முன்பிப் பிறவி முடிவது தானே.
-
3. அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொ டேற்க இசைந்தனன்
துன்புறு கண்ணிஐந் தாடுந் தொடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே.
-
4. புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்
குணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பமதுஇது வாமே.
-
5. உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றுந் தெரிந்தறி வார்இல்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.
-
6. கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்றன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே.
-
7. நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்
றும்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத் திடைநின் றிரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே.
-
8. முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலார்நந்தி
யன்பில் அவனை அறியகி லாரே.
-
9. ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற் றறிந்து செயலற் றிருந்திட
ஈசன்வந் தெம்மிடை ஈட்டிநின் றானே.